எமர்ஜென்சி.. 43 ஆண்டுகள்
25 ஜூன் 1975 அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி
எமெர்ஜென்சி - அறிவித்த நாள்.
அகில இந்திய வானொலியில் இந்திராகாந்தி “இந்தியக்குடியரசு
தலைவர் எமர்ஜென்சியை அறிவிக்கிறார். பொதுமக்கள் பதட்டமடைய தேவையில்லை" என்றார்.
"The President has declared a state of Emergency.
There is no need to panic)
ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி,
எல் கே அத்வானி, அசோக் மேத்தா, இன்னும் பலர்
சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ஆனாலும் எமெர்ஜென்சியில் இச்செய்தியை
இந்தியாவில் வாசிக்க முடியவில்லை.
. வழக்கம்போல பிபிசி தான் இச்செய்தியை முதன் முதலில்
ஜூன் 26, காலை 7.30 மணிக்கு அறிவித்தது.
எமெர்ஜென்சி ஏன் அறிவித்தார் என்பதைக் குறித்து
இன்று பலர் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
குஜராத்தில் எழுந்த மாணவர்களின் எழுச்சியும் போராட்டமும்,
பீகாரில் ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம்,
14 இலட்சம் இரயிலே தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் நடத்திக் காட்டிய புகழ்பெற்ற
இரயில்வே நிறுத்தம், ராவ் பெரேலி தேர்தலில் இந்திராகாந்தியின்
வெற்றியை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு..இறுதியாக
இந்திராகாந்திக்கு கோபமூட்டிய அன்றைய இரவு ராம்லீலா மைதானத்தில் நடந்தக் கூட்டம்..
மொரார்ஜிதேசாயும் ஜெயபிரகாஷ் நாராயணனும் பேசிய
பேச்சு..
At this rally, JP gave a call to army
and police not to follow the orders of
Indira Gandhi government…..The police, army
and the people were asked to follow the
Constitution than Indira Gandhi.
மேற்கு வங்க முதல்வர் சித்தார்த் ஷங்கர் ராயிடம் தான்
முதன் முதலாக இது குறித்து பேசினார் இந்திரா.
அவருடைய அமைச்சர்கள் யாரிடமும் இது பற்றி ஆலோசிக்கவில்லை!
அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்க நேரமில்லை என்று
குடியரசு தலைவரிடம் சொல்லிவிடலாம் என்று
இருவரும் சேர்ந்து முடிவு செய்கிறார்கள்.
இந்திராவின் வானொலி உரையை எழுதி முடித்து
இந்திராவின் வீட்டை விட்டு வெளியில்
வரும்போது அதிகாலை 4 மணியைக் கடந்துவிட்டது.
ராய் அவர்களை இந்திரா காந்தி வீட்டு வாசலில்
சந்திக்கும் ஓம் மேத்தா அவர்கள்
.. “..பத்திரிகைகளுக்கு மின்சாரம்
வழங்குவதை தடை செய்தல், நீதிமன்றங்களை மூடுதல்..
என்ன இது?”
இதெல்லாம் எங்கள் திட்டத்தில் இல்லை என்று
ராய் பதில் சொல்கிறார்.. மீண்டும் இந்திராவை சந்திக்க காத்திருக்கிறார் ராய்.
ஓம் மேத்தா தான் அறிந்த தகவலை அவரிடம் சொல்கிறார்.
பத்திரிகைகளை தணிக்கை செய்வது இந்திராவின் விருப்பம். ஆனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்றவை சஞ்சய் காந்தியின் திட்டம்’. என்று போட்டு உடைக்கிறார்.
மறு நாள் காலை 6 மணிக்கு அமைச்சரவையைக் கூட்டுகிறார் இந்திரா.
அவர்களுக்கு கூட்டத்தை அறிவித்தது காலை 5 மணிக்கு !
9 அமைச்சர்கள் டில்லியில் இல்லை. 8 அமைச்சர்களும் 5 இணை
அமைச்சர்களும் கலந்து கொண்ட கூட்டம். இந்திராகாந்தியின் அமைச்சரவைக்கு
எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டதை இந்திராகாந்தி சொல்கிறார்.
எந்த அமைச்சரும் வாயைத் திறக்கவே இல்லை.!!
ஒரே ஒரு அமைச்சர் மட்டும் மெல்லிய குரலில் கேட்ட கேள்வி
அந்த அறையின் மயான அமைதியைக் குலைத்தது.
பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்டார்
'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்?'
என்று.
வேறு எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல் இந்தியாவில்
இந்திராகாந்தியின் அமைச்சரவைக் கூட்டம் எமர்ஜென்சியை
ஏற்றுக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பின்.. இந்திராவையும் நெருக்கடி நிலை பிரகடனத்தையும்
பற்றிய விமர்சனங்கள் அவர் வாழும் காலத்திலேயே வந்தன.
அவருடைய மறுமொழி .. அவருடைய மொழியில்..
When I implied the Emergency Not Even a Dog breached
எமெர்ஜென்சி பத்திரிகைகளை ஊமையாக்கியது.
ஊடகங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாகின.
எனக்குத் தெரிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தன் ஆசிரியர்
பக்கத்தை எதுவும் அச்சிடமால் வெள்ளைத்தாளாக
வெளியிட்டது. இன்னொரு பத்திரிகை தாகூரின்
கவிதை வரிகளை
"Where the mind is without fear,
and the head is held high”
அச்சிட்டு வெளியிட்டது.
பின்னணிப்பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களை
வானொலியிலோ தொலைக்காட்சியிலோ ஒலி ஒளி பரப்ப
தடை செய்யப்பட்டிருந்தது !
Kissa Kursi Ka - 1977
இந்தி திரைப்படம்.. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை பற்றியது.
தமிழ் நாட்டில் அன்று நடந்தது என்ன?
திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
திமுக தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ்க்கு அடைக்கலம் கொடுத்து
சென்னையில் தலைமறைவாக வைத்திருந்ததாக சொல்கிறார்கள்
கலை இலக்கிய துறையில் நெருக்கடி நிலை
குறித்து எவ்வித சலனமும்
தமிழகத்தில் இருந்ததாக தெரியவில்லை.
(அப்படி எதாவது குறிப்பிட்டு சொல்லும் படியாக
இருந்தால் சொல்லுங்கள் )
இந்திராவின் 20 அம்ச திட்டங்கள் ஏற்கனவே தமிழ் நாட்டில்
செயல்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதாக
கலைஞர் கடிதம் எழுதினார். ஆனாலும் லும்1976 ஜனவரி 31 திமுக வின் பதவிக்காலம் முடிவதற்கு 6 வாரங்களுக்கு முன்பே திமுக அரசு கலைக்கப்பட்டது.
அதன் பின் நிகழ்ந்த சில சுவையான சம்பவங்கள்
முரசொலி செய்திகள்
மிகவும் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக
குடும்பவிழாக்கள் புதிது புதிதாக
வரிசையாக உருவாக்கப்பட்டன.
ஆம் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர்கள்
மீண்டும் திருமணம் செய்வதும்
ஏற்கனவே கட்டிய பழைய வீட்டுக்கு
வெள்ளை அடித்து புதுமனை புகுவிழா நடத்துவதும்
அந்த விழாக்களில் கலைஞர் கலந்து கொள்வதுமாக
திமுக வின் செயல்பாடுகள் இருந்ததை
நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அதே கலைஞர் 1980 ல்
சென்னை கடற்கரையில் அன்னை இந்திரா காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு,.
‘நேருவின் மகளே வருகே... நிலையான ஆட்சி தருக’ என்றும் சொன்னது
மறந்துவிடவில்லை.
மிக முக்கியமான இன்னொரு செய்தி…
எமர்ஜென்சிக்கு பெருமை சேர்த்த செய்தி…
இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் இரயில்கள் பேருந்துகள்
எல்லாம் தாமதமின்றி சரியான நேரத்தில் ஓடிக்கொண்டிருந்தனவாம்!