Tuesday, April 30, 2019

இவர்களுக்கு மே தினம் உண்டா

building contract workers in india photo க்கான பட முடிவு


மும்பை பெரு நகரின் வயிற்றைக் கீறி
ஆழமாகத் தோண்டி
இரும்புக் கம்பிகளால் சித்திரவதை செய்து
அதில் எங்கெல்லாமோ புதிது புதிதாக
அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டே
இருக்கின்றன.. ஒரு 10 வருட த்திற்கு முன்பு கூட
 நான் பார்த்த முல்லை நிலம் இப்போது இல்லை.
அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டே
இருக்கின்றன. பெரு நகரத்தின் பசி அடங்க வில்லை.

இந்த இடங்களில் எல்லாம் வேலைப் பார்க்கும்
கட்டிட த் தொழிலாளர்கள் /சித்தாளு/
இவர்களும் தொழிலாளர்கள் தான். ஆனால்
இவர்கள் நம் தொழிற்சங்க தொழிலாளர்கள் அல்ல.
இவர்கள் ஊதிய உயர்வு கேட்டோ போனஸ் கேட்டோ
போராடியதாக எந்த வரலாறும் இதுவரைக் கிடையாது.
இவர்களும் தொழிலாளர்கள் தான்.
இவர்களுக்குத் தினக்கூலி உண்டு.
10 முதல் 12 மணி நேரம் வரை உடல் உழைப்பு.
தினக்கூலி ரூ 400 முதல் 800 வரை.
அதாவது மேஸ்திரி/ டைல்ஸ் போடுபவர் /
கொத்தனார் இவர்களுக்கு கூலி அதிகம்.
மற்றபடி தலையில் சிமிண்ட் சட்டியைச் சுமந்து
கொண்டு ஏறும் தொழிலாளிக்கு சம்பளம் குறைவு.

இவர்களின் வேலைக்கு உத்திரவாதமில்லை
என்பது மட்டுமல்ல, இவர்களின் உயிருக்கும்
உத்திரவாதமில்லை. பாதுகாப்பு உபகரணங்கள்
என்று சொல்லப்படும் எதைப் பற்றியும் இவர்கள்
அறிந்த து கூட இல்லை.
பொதுவாக இவர்கள் எங்கெல்லாம் புதிது புதிதாக க்
கட்டிடங்கள் கட்டப்படுகிறதோ அந்த இட த்திற்கு
அருகில் தங்கள் குடியிருப்புகளை மாற்றிக்கொண்டே
அலைகிறார்கள். 
இவர்களுக்கு நிரந்தர முகவரி இல்லை.
எனவே இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை.
இவர்களும் ஓட்டுப்போடும் ஜன  நாயக க் கடமையை
பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

இவர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை.
எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
இவர்கள் அக்க்வுண்டில் பணம் வரவு
வைக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
இவர்கள் இந்தியா எங்கும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இந்தியர் என்ற அடையாள அட்டை
இல்லை என்பதாலேயே இவர்களை இந்தியர்கள்
இல்லை என்று எவரும் முடிவு செய்துவிட முடியாது.
இவர்கள் இருக்கிறார்கள்..
இவர்களும் நம்மோடு இருக்கிறார்கள்.
நாம் தான் இவர்களுடன் இருப்பதில்லை.

அதனால் என்ன இவர்கள் உழைப்பின் வியர்வை
 நாம் குடியிருக்கும் வீடு/ மால்/ சினிமா தியேட்டர்/
மருத்துவமனை என்று எல்லா கட்டிடங்களின்
அஸ்திவாரத்திலும்… நம் வாழ்க்கையை ஏந்திக்
கொண்டிருக்கிறது. சித்திரச் சோலைகளே…


Sunday, April 28, 2019

பொன்பரப்பியும் உங்கள் மனசாட்சியும்

பொன்பரப்பி
உள்ளிட்ட அனைத்து
சாதி மதவாத பாசிச வன்முறைக்கு
எதிராக எனது குரல்

Image result for பொன்பரப்பி ஜெயமோகன்
அண்மையில் நிகழ்ந்த இக்கூட்ட த்தில்
பேசியவர்களின் உரைகளைக் கேட்டேன்.
பொதுவாக இக்கூட்டம் குறித்து எழுந்த
சர்ச்சைகள் ஒரு பக்கம்,
இதன் மறுபக்கமாக எப்போதுமே பாதிக்கப்பட்ட
சாதியினரின் கண்டனக்குரலை மட்டுமே அறிந்த
பொதுவெளியில் தமிழ்ச்சமூகத்தின் கண்டனக்குரல்
ஒலித்தாக வேண்டும் என்பதும் அக்கண்டனக்குரல்
தமிழ்ச் சமூகத்தின் பொது அறமாக மாற்றும்
முயற்சியும் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது என்பதற்காகவும்
சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்றி சொல்வது
ஜன நாயக கடமை என்று நினைக்கிறேன்.
இனி….
இந்தக் கண்டனக்கூட்டம் காலத்தின் தேவையாகி
இருக்கிறது. இந்தக் கண்டனக்கூட்ட த்தில் தன்னுடைய குரல் நேரடியாக ஒலிக்க வேண்டும் ,
தன் எதிர்ப்பும் கண்டனமும் இந்தக் கூட்ட த்தின்
ஒரு பதிவாக இருந்தாக வேண்டும் என்று கலந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
இக்காட்சியும் மாற்றமும்
தோழர் தொல். திருமாவளவன்
முன்வைக்கும் ஜன நாயக அறத்தின் வெற்றியாக
கருதுகிறேன். ஆனால் இதுவே தனிமனிதனின்
மனசாட்சியின் குரலாக ஒலித்து மனசாட்சியின்
தார்மீக வெற்றியாக மாறி இருக்கிறதா என்று
பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மீண்டும் முதல் வரிகளை வாசிக்கவும்.
அந்த வரிகள் தான் பொன்பரப்பி கண்டனக்
கூட்ட த்தின் பதாகையில் இருந்த வரிகள்.
இந்த வரிகளை மனசாட்சியுடன் அணுகும்
நாள்.. வர வேண்டும்.

Wednesday, April 24, 2019

மும்பை பாமரனின் கேள்வி

தேர்தல் ஆணையம் கைப்பற்றும் பணத்தை
என்ன செய்கிறார்கள்?
இதுவரை ரூ 1400 கோடி கைப்பற்றி இருப்பதாக
செய்தி வந்திருக்கிறது.
சட்டப்படி சரியான ஆவணங்களைக் கொடுத்துவிட்டு
கைப்பற்றிய பணத்தை உரியவர்கள்
 பெற்றுக் கொள்ளமுடியும். 
ஆனால் வேடிக்கை என்னவென்றால்
கைப்பற்றிய பணம் தன்னுடையது இல்லை என்று
சொல்லிவிடுகிறார்கள்! 

இன்று என் நண்பர் மும்பை பாமரன் 
இது பற்றி என்னிடம் பேசினார். சட்டப்படி
யாரும் உரிமைக்கோராத பணத்தை அரசாங்க
கருவூலத்தில் செலுத்த வேண்டும் .என்று சொன்னேன்.
அப்படி இதுவரை எவ்வளவு பணம் கணக்கு
வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
இவை தவிர மூக்குத்தி, வேட்டி, சேலை, கஞ்சா,
பீர், செல்போன், கிரடிட் டோக்கன்…இப்படி 
வகைவகையாக தேர்தல் ஆணையம் கைப்பற்றி
இருக்கிறது. இதை எல்லாம் என்ன செய்வார்கள்
என்று கேட்கிறார் என் நண்பர். 
என்ன செய்வார்கள்?????
கைப்பற்ற பட்ட தெல்லாம் பொதுமக்கள் பணமாம்
எனவே பொதுமக்களுக்கே அதை எல்லாம் திருப்பிக்
கொடுக்க வேண்டுமாம்.. என்று தீர்வு சொல்ல ஆரம்பித்தார்.
நான் அவரிடம் சொன்னேன்..
என்னுடைய பணமில்லை என்று சொல்லியதை
உங்களுடைய பணம் என்று ஆதாரத்துடன் கேட்டால்
கொடுத்துவிடுவார்கள்.. முயற்சி செய்து பாருங்கள்!
என்று சொன்னேன்.
மனுஷனுக்கு ரொம்பவும் கோவம் வந்துவிட்ட து.
அது என்ன.. எங்களைப் போல பாமரன் மட்டும்
எதைக் கேட்டாலும் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட்,
பான் கார்ட் , பொண்டாட்டி இருந்தா அவளோட
ஆதார் கார்ட் என்று எல்லா ஆவணமும் கேட்கிறவர்கள்
இவ்வளவு பணம் மட்டும் எப்படி ஆவணமே
இல்லாமல் வந்த துனு கேட்க மாட்டார்களா?
அவுங்களுக்கு மட்டும் எப்படி ஆவணம் இல்லாமல்
இம்புட்டு பணத்தை எடுக்க முடியுது..
உங்க சட்டம், உங்க பேங்க் எல்லாமே பாமரனுக்கு
எதிரானவை..என்று பேச ஆரம்பித்துவிட்டார்…
நான் "கப் சிப்"
ஆனால் அவர் கேள்வியில் தொனித்த நியாயத்தின்
குரலை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
#election_commission

Friday, April 19, 2019

அச்சமூட்டும் தேர்தல் செலவுகள்


 மை லார்ட்..
தேர்தல் திருவிழாக்களை
ரத்து செய்துவிடலாம்.
இதற்கான காரணங்களை ஆதாரத்துடன்
இணைத்திருக்கிறோம்.
கணம் கோர்ட்டார் அவர்களே..
இந்திய மக்களின் பொது நலனில் அக்கறைக்கொண்ட
இந்தப் பொது நல வழக்கை கணக்கில் எடுத்துக் கொண்டு
தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


ரூ. 90,000 கோடி செலவு செய்து இந்திய மக்களாட்சி 
திருவிழாவைக்கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
 ஆனால் ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறுவதில்லை.
ஒரு விரல் புரட்சி என்ற உங்கள் புரட்சிகளில்
எங்களால் எதையும் சாதித்துவிட முடியவில்லை
என்பதை ஒத்துக் கொள்கிறோம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்
தேர்தல் களமும் அதிகார நாற்காலி பங்கீடும்
எவ்வித த்திலும் எங்கள் வாழ்க்கையை 
மாற்றிவிடவில்லை.
எனவே.. எங்கள் வரிப்பணத்தில்
 இவ்வளவு செலவுசெய்து தான் ஆக வேண்டுமா ?
 என்ற கேள்வி எழுகிறது.


கணம் கோர்ட்டார் அவர்களே….
அனைத்துக் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும்
அவர்களின் வாரிசுகளை பதவிக்கு கொண்டு வரட்டும்.

இதில் தொண்டர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.
வாரிசுகள் என்று சொல்லும் போது
அந்த வாரிசுடமையைத் தீர்மானிக்கும்
அதிகாரமும் கட்சிகளின் மேலிட த்தை மட்டுமே
சார்ந்த தாக இருப்பதில் பொதுமக்களாகிய எமக்கு
எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை.
ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும்
நடக்கப்போவது என்னவோ இதுதான்.
இந்த யதார்த்தமான அரசியலை நாங்கள்
ஏற்றுக்கொண்டு விட்டோம்.
எனவே எங்கள் கோரிக்கையை.. கணம் கோர்ட்டார்
அவர்கள் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க
வேண்டுகிறோம்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை.
எங்ககளுக்குத் தேவை எல்லாம்
இலவச டாக் டைம்ஸ் + இலவச
இண்டர்னெட் வசதி.!
நாங்கள் மகிழ்ச்சியாக மரணிக்க
இதைவிட வேறு என்ன வேண்டும்
மை லார்ட்.!
ஆதாரங்கள்:

Estimate of total Lok Sabha election cost:
1.      Expenses relating to 1 crore election workers (Rs. 15,000 per person) – Rs. 15,000 crores
2.      Cost of setting up 10 lakh booths (Rs. 1 lakh per booth) – Rs. 10,000 crores
3.      Cost of EVM machines (including maintenance) – Rs. 2000 crores
4.      Cost of security – Rs. 2000 crores
5.      Cost of Logistics – Rs. 1000 crores
6.      Cost of communication, advertisement, training – Rs. 1000 crores
7.      Cost of Voter list preparation, voter registration – Rs. 1000 crores
8.      Postal ballot cost, counting centers etc. – Rs. 500 crores
Total  = Rs. 32,500 crore
Lok Sabha election costs Rs. 30,000 crores.
Then we have state elections and local body elections
 where same 100 crore citizen need to vote.
 In all we are spending around Rs. 90,000 crores
every 5 years on election
THANKS TO
Neeraj Gutgutia (neeraj@Right2vote.in, +91 9920591306

Thursday, April 18, 2019

சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்..



Image result for ரஜினி இமயமலையில்

இப்போ நம் வேட்பாளர்கள் அனைவரையும்
சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்.
உலக நாயகனுக்குப் பிரச்சனை இல்ல.
அவரு பேசமா டார்ச் லைட் அடிச்சிக்கிட்டு
புதுப்படம் நடிக்கப் போயிடலாம்.
ஏன்னா .. இன்னும் 30 நாட்கள்
ஜெயிச்சிட்டோமோ தோற்றுட்டோமானு
தெரிஞ்சிக்க முடியாமா..
நம்ம வேட்பாளர்கள் எல்லாம் என்னப்பாடு படுவார்கள்!
அதை நினைச்சா தான் எனக்கே ரொம்ப ரொம்ப
டென்ஷனா இருக்கு.
ப்ளீஸ் இந்தச் சூழலில் 
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான்
எல்லோரையும் காப்பத்தனும்.
ரஜினி தலைமையில் எல்லோரும் 
இமயமலைக்கு போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.
ரஜினி கட்டியிருக்கும் தியான மண்டபம்
உங்களுக்காக காத்திருக்கிறது.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..
எனக்குத் தெரியும்..
சிலருக்கு ரஜினியைக் கண்டாலே ஆகாது.
ரஜினி வந்தவுடன் வீட்டுக்கதவை அடைத்துக் 
கொண்டவர்களும் உண்டுனு கேள்விப்பட்டேன்..
ம்ம்ம்.. நீங்க ரஜினியோட டிரிப் போகறது பிரச்சனைதான்..
பேசமா.. இந்தியாவிலிருந்து லண்டனுக்கோ சிங்கப்பூருக்கோ
குடும்பத்தோட போயிட்டு வரலாம்.
கூட்ட த்தோட போக விருப்பமில்லையா..
தனியாக கூட போகலாம்.
அப்படியே போன இட த்தில
ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கலாம்.
இந்த வெயில்ல தெருத்தெருவா போயி
பிராச்சாரம் செய்து உடம்பைக் கெடுத்துக் கொண்டீர்கள்!
அதை இப்போ சரி செய்து கொள்ளலாம்.
வெற்றியா தோல்வியா என்ற கவலையே
இல்லாதவர்கள் ஜாலியா இருங்க.
இந்த தேர்தல் சரியில்லை
ஓட்டு மிஷினு சரியில்லைனு
எதாவது டிவிக்காரன் உங்களுக்கு விவாத நிகழ்ச்சி
நட த்தி பாயிண்ட் பாயிண்டா கொடுத்திடுவாங்க.
தோற்றுப்போனவுடன் 
அதை அப்படியே உங்க வசனத்தில் சொல்லி
யு டியூப்பில் அசத்திடுங்க..
எப்படியோ.. நீங்கள் எல்லோரும் கட்சி வேறுபாடின்றி
எனக்கு முக்கியம் தான்.
நீங்கள் எல்லாம் தானே தேர்தல் திருவிழாவின்
தேர்கள்…
தேரோட்டம் இல்லை என்றால்
திருவிழாக்கள் ஏது..??!!

Wednesday, April 17, 2019

டியர் சூர்யா

Image result for women watching sky painting


டியர் சூர்யா…
ஓட்டுப்பெட்டிகள் உனக்காக காத்திருக்கின்றன.
நீ களத்தில் நிற்கிறாய்,
நான் வெளியில் நிற்கிறேன்.
நான் பார்க்கும் காட்சிகளை நீ பார்க்க முடியாது
அந்தக் காட்சிகளின் ஊடாக நான் வந்தடையும் புள்ளிகள்
நமக்கான இடைவெளிகளை அதிகப்படுத்திக்
கொண்டே இருக்கின்றன.
காதலையும் நட்பையும் மட்டுமே பேசுவதுடன்
முடிந்து விடுவது அல்ல 
நமக்கான உலகம்.
அதில் நீயே என் ஆசானும் என் வெளிச்சமும்.
ஆனால் வெளிச்சத்தை விட இப்போதெல்லாம்
இருள் தான் சக்தி வாய்ந்த தாக மாறிவிட்ட து.
வெளிச்சத்தில் புலப்படாத காட்சிகள் இருளுக்குள்
தன்னை நிர்வாணமாக்கி ஆட்சி செய்கின்றன.
அதுவே போதையாகி பசித்தவனைத் தூங்க வைக்கிறது.
அவன் நிம்மதியாக தூங்குகிறான் என்று
காட்சிப்படுத்தி உன்னை விற்கிறார்கள் அவர்கள்.
ஒலிக்குப்பைகளால் நிரம்பி இருக்கும் 
உன் வாசலை 
இன்றைய மெளனத்தால் துடைத்து எடு.
அத்தருணத்தில் என் மெளனம் 
உன் வாசலில் கோலமாக விரியட்டும்.
கோலத்தின் ஒவ்வொரு புள்ளிகளையும்
மனசாட்சி என்ற கோடுகளால் இணைத்து விடு.
கோலம் தனக்கான வடிவத்தை கண்ட டையும்.
அந்தக் கோடுகளில் இணையாமல்
கோடுகளுக்குள் வந்துவிடாமல்
சிதறிக்கிடக்கும் புள்ளிகளை
யார் வைத்தார்கள்?
ஏன் வைத்தார்கள்?
கோலம் சிதைந்துவிடக் கூடாது.
உன் வாசல் வாழ்க்கையின் கதவுகள்..
என்ன செய்யப்போகிறாய்?
அதைத் துடைத்துவிடுவது தான்
கோலத்தின் வடிவத்திற்கும்
வாசலின் விடியலுக்கும் நல்லது.
இன்றைய மவுனத்தால் துடைத்துவிடு சூர்யா..

உரையாடல்களின் கதவுகளை மூடுவது
போராளிகளின் வழியல்ல.
போராட்டங்கள் அனைத்துமே உரையாடல்களில் தான்
முடிய வேண்டும். 
ஆயுதப் போராட்டங்கள் கூட உரையாடல்களில் தான்
வெற்றி பெறுகின்றன.

முதலில் அரசியல் விடுதலை வரட்டும்.
பொது எதிரியை முறியடிப்போம் என்று
புதிது புதிதாக பேசுகிறாய்.
எதிரணியைக் கூட நீ பகைவனின் முகமாக
சித்தரிக்கிறாய்.
இது உன் போதாமையைக் காட்டும் என்பதையும்
புரிந்துக் கொள்ள மறுக்கிறாய்.

முதலில் அரசியல் விடுதலை வரட்டும் என்ற
உன் சொற்றோடர் எனக்குப் புதியது அல்ல.
நம் வரலாற்றுக்கும் புதிதல்ல.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் 

சமூக விடுதலை இன்றிஅரசியல் விடுதலை சாத்தியமில்லை 
என்ற கருத்தை முறியடிக்க சொல்லப்பட்ட வாதம்
முதலில் அரசியல் விடுதலை வரட்டும்
அதன் பின் 
சமூக விடுதலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள்..
உனக்கு இதை நினைவூட்டவது
எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
என் மொழியை என் எழுத்தை என் கருத்தை
நீ நிராகரிக்கலாம். சூர்யா..
அது உன் விருப்பம் சூர்யா..
அது ஒரு வகையில் தனிப்பட்ட உன் உரிமையும் கூட.
உன் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கிறேன்.
அதையே உன்னிடமும் எதிர்ப்பார்க்கிறேன்.
இந்த எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை.
இதை உன் அதிகாரத்தால் நீ முறியடிக்க முடியாது.
என் உரையாடல்கள் தொடரும் சூர்யா..
உனக்கும் சேர்த்து தான் நான் 
உரையாடிக்கொண்டிருக்கிறேன்.
நீ வெற்றி பெறுவாய்…
உன் கூட்டமும் கூட வெற்றி பெறலாம் சூர்யா..
ஆனாலும் உன் வெற்றிகளை என்னால்
கொண்டாட முடியாது.
உன் வெற்றிகளுக்காக நீ கொடுத்த விலை..???
அது…. எதிர்காலத்தில்
உன்னை ஊமையாக்கிவிடும்.
உன் குரல்வளை நெறிக்கப்படும் போது
இப்போது ஒலிக்கும் என் குரல்
உனக்காக மீண்டும்..
காற்றில் கலந்து உன்னைக் கண்ட டையும்.
மண்ணும் மரமும் 
காடும் கழனியும்
ஆறும் ஆற்றுமணலும்
கடலும் வானமும் 
எல்லோருக்குமானது.
காற்றலைகளை நீ சொந்தம் கொண்டாட முடியாது.
கடல் அலைகளை நீ விற்க முடியாது.
வானத்தின் நட்சத்திரங்கள் உன் அதிகாரத்திற்கு அடிபணியாது..
சூர்யா…
கருந்துளைகளைக் கண்டுப்பிடித்துவிட்ட காலமிது.
பிரபஞ்சம் விரிகிறது.
விசைகளின் இயக்கத்தில்
கோள்கள் உரசிக்கொள்கின்றன.
சூர்யா
கருந்துளைகளின் ஈர்ப்பில் காணாமல் போய்விடுமோ 
நம் பூமி..

Monday, April 15, 2019

நாய்கள் ஜாக்கிரதை..


நாய்கள் சிலருக்கு அந்தஸ்தின் அடையாளமும் கூட
நாய்களுக்குப் பைத்தியம் பிடிக்க
பருவ நிலை காரணமில்லை.
எப்போது வேண்டுமானாலும் எந்த நாய்க்கும்
பைத்தியம் பிடிக்கலாம்.
நாய்கள் ஜாக்கிரதை.
இந்தப் பைத்தியக்கார நாய்கள் கடித்தால்
ஐந்து வருஷம் தொப்புளைச் சுற்றி
ஊசிப்போட வேண்டும்.
எப்படிப் பார்த்தாலும்
நாய்க்கடி வைத்தியம் தான்..
உங்களைக் காப்பாற்றிக்கொள்ள
பைரவனைக் கும்பிடுங்கள்..
ஸ்ரீ பைரவ நமஹ.
கொஞ்சம் நன்றியுள்ள நாய்க்கடி என்றால்
தொப்புளைக் காப்பாற்றி விடலாம்.
இல்லை என்றால் தொப்புள் வீங்கி
வெடித்துவிடும்..
தொப்புள் வீங்கி வீங்கிப் பெரிதாகித்
தரையில் தொங்கும்.
முகத்தைக் கூட மறைத்துவிடும் அபாயம் உண்டு.
நாய்கள் ஜாக்கிரதை..
நாய்களின் கழுத்துச் சங்கிலியை இழுத்துப் பிடித்துக்
நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
நாய்ச்சங்கிலி அழகாக இருக்கிறது என்பதற்காக
உங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்,
நாய்கள் குரைத்துக் கொண்டே
கூட்டம் கூட்டமாக வருகின்றன..
நாய்கள் ஜாக்கிரதை.

Thursday, April 11, 2019

ஜாலியன் வாலா பாக் - நூறாண்டு வடு 13-04-1919

jallianwala bagh க்கான பட முடிவு
ஜாலியன் வாலா பாக். – 13 -04- 1919
ஒரு நூற்றாண்டின் இரத்தக் கறை.
இந்திய வரலாற்றில் இந்தச் சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் 
முடியப் போகிறது..
இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரிட்டன் பிரதமர்
 தெரஸா மே அவர்கள் ஜாலியன் வாலா பாக்
பிரிட்டன் வரலாற்றில் வெட்கக் கேடான வடு. 
அன்றைய படுகொலைக்காக ஆழந்த வருத்தங்களைத் 
நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோன்
அவர்களும் முழுமனதுடன் தங்கள் வருத்தங்களைத்
 தெரிவித்துக் கொள்வதாக பேசி இருக்கிறார்கள்.

13 – 04 – 1919 ல் மாலை 5 மணிக்கு ரெளலட் சட்ட த்திற்கு 
எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் கூடுகிறார்கள். 
5.30 க்குப் பிறகு வெள்ளை அதிகாரி ஜெனரல் டையர் 
50 பேர்க் கொண்ட கூர்க் படையுடன் வருகிறான்.
அவர்கள் கூட்ட த்தை கலைந்துப் போகச் சொல்கிறார்கள்.
வாயில்கள் அடைத்திருக்கின்றன / குறுகலான வழி.
கொடுத்த நேரமோ சில நொடிகள் தான். 
கூட்டம் சிதறி ஓடுகிறது. 
10 நிமிடங்கள்தொடர்ந்து கூட்ட த்தை நோக்கிச் சுட்டார்கள்.
ஒன்றிரண்டு குண்டுகள் அல்ல.
1650 குண்டுகள் பாய்ந்தன.
அவர்களின் துப்பாக்கிகள்
 மவுனிக்கும் வரைச் சுட்டார்கள்.
 கூட் ட த்தில் இருந்தவர்கள் குறைந்த து
5000 முதல் 30,000 வரை இருக்கும் என்று சொல்கிறார்கள்.
குண்ட டிப் பட்டு இறந்தவர்கள், காயம்பட்டு சிகிச்சையின்றி
 இற ந்தவர்கள்.. துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் ஜாலியன் லாலாபாக்
மைதானம் எங்கும் மக்களின் பிணங்கள்.பிணங்கள்.
தண்ணீர் தண்ணீர் என்று முணங்கும் சப்தம்..
டையர் 8 மணிக்கெல்லாம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துவிடுகிறான்.
மைதானத்திற்கு வந்து யாரும் யாருக்கும் உதவும் நிலை இல்லை.
அந்த இரவில் அங்குச் செத்துக் கொண்டிருந்த
மனிதர்களுக்கு ஒரு வாய்த் தண்ணீர் கொடுத்த 
உத்தம்சிங்க் என்ற இளைஞன் தான் ,
இருபது வருடங்கள் காத்திருந்து
1940, மார்ச் 14 ல் இலண்டனில் ஜாலியன் லாலாபாக் 
படுகொலைகளுக்கு
காரணமாக இருந்த அதிகாரி டையரைச் 
சுட்டுக் கொன்ற சம்பவமும் நடந்தேறியது.
.
ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில்
 இறந்தவர்கள் எத்தனை பேர்?
யார் யார்? அவர்கள் பெயரென்ன?
 இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம்.
இதுவரை 502 பேரின் பெயர்கள் கிடைத்திருக்கின்றன. 
45 பேர் யார் என்றுதெரியவில்லை. 
இவர்களில் இளைஞர்கள் முதியொர்கள் பெண்கள் 
குழந்தைகளும் அடக்கம்.
 சீக்கியர்களும் இந்துக்களும் இசுலாமியர்களும் அடக்கம். 
இதைப் பற்றி ஆய்வுகள் செய்திருக்கும் கிஷ்வர் தேசாய் அவர்கள்
 7 மாதக் கைக்குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை
பர்தா அணிந்தப் பெண்களும் உண்டு என்று சொல்கிறார்.

இச்சம்பவத்தை நினைவு கூர்பவர்கள்
மறு நாள் ஏப்ரல் 14 ல் குவியல் குவியலாக
 மைதானத்தில் கிடந்தப் பிணங்களை 
மொத்தமாக எரித்தார்கள் என்று சொல்கிறார்கள்.
பிணங்களைக் கொண்டு இறந்தவர்களை அடையாளம் 
காட்டவோ எழுதி வைக்கவோ முறைப்படியான 
எதுவும் நடக்கவில்லை என்றே
தெரிகிறது.

(KISHWAR DESAI, THE AUTHOR OF JALLIANWALA BAGH , 1919- THE REAL STORY. 
She is also the chair
Of the partition museum trust)
இச்சம்பவத்திற்குப் பின் நூற்றுக்கணக்கானவர்கள்
 சிறையில் அடைக்கப்பட்டார்கள். 
அவர்களிலும் 18 பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.
பலர் அந்தமான் சிறைக்கு அனுப்ப பட்டார்கள். 

இச்சம்பவத்தை நேரில் கண்ட நானக் சிங்க் ,
 22 வயது பஞ்சாபி எழுத்தாளர்
Khooni Vaisakhi என்ற தலைப்பில் நீண்ட கவிதை எழுதினார். ஆனால்
1920ல் அக்கவிதையை அன்றைய ஆங்கிலேய அரசு தடை செய்த து.
கவிதையைக் காலம் மறந்துவிட்ட தோ 
அல்லது கவிதை தலை மறைவானதோ தெரியவில்ல!
100 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் அக்கவிதை 
அவருடைய பேரனால் மீண்டும் கண்டுப்பிடிக்கப்பட்டு
 ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்று புத்தகத்தில் 
வெளிவருகிறது.

இத்தனைக்கும் நடுவில் வெட்கித் தலைகுனியும் 
இன்னொரு சம்பவமும் நடந்திருக்கிறது. 
அமிர்தசர்ஸ் பொற்கோவில் சீக் மதக்குரு
இதே வெள்ளைக்கார அதிகாரி டையருக்கு பரிவட்டம்
கட்டிய செய்தியும் கிடைக்கிறது.
கொதித்துப் போன அமிர்தசர்ஸ்
கல்சா கல்லூரி மாணவர்கள் 
12 அக்டோபர் 1920 பொற்கோவில் நிர்வாகத்தை
 எதிர்த்துப் போராட்டம் செய்து வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு தலைமுறை பஞ்சாபி சீக்கியர்கள் திருமணம் ஆனவுடன்/
முதல் குழந்தைப் பிறந்தவுடன் கோவிலுக்குப் போவது போல 
ஜாலியன்வாலா பாக் நினைவிட த்திற்கு வந்து
 தங்களுக்காக உயிர் நீத்த தம் முன்னோரின் 
ஆசிகளைப் பெறுவதை வழக்கமாக
கொண்டிருந்தார்கள்.
இன்று.. 100 ஆண்டுகளுக்குப் பின்… 
வெள்ளை ஏகாதிபத்தியத்தின்
மன்னிப்பு பதிவாகி இருக்கிறது.
இந்த மன்னிப்புகள் எதையும்
மீட்டுத் தரப்போவதில்லை தான். ஆனால்
வரலாற்றில் அதிகாரத்தின்
அடுத்த தலைமுறையை அர்த்தமுள்ளதாக்கி

மனித த்தை ஒவ்வொரு தருணத்திலும் 
உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறது.

Monday, April 8, 2019

தேர்தல் அறிக்கைகள் ..

மோதி


தோளில் கை போட்டு சிரிப்பதெல்லாம் பார்க்க
நல்லாதான் இருக்கு. ஆனா தேர்தல் அறிக்கைகள்’
கை குலுக்கவில்லையே!
1)   பொதுசிவில் சட்ட த்தை அமுல் படுத்தக்கூடாது – அதிமுக.
பொதுசிவில் சட்ட த்தைக் கொண்டு வந்தே தீருவோம் – பா.ஜ.க

2)   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் – அதிமுக.
பா.ஜ. க அறிக்கை அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை

மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு
தேசியக் கட்சிகள் முரண்படும் புள்ளிகள்

பாரதிய ஜனதா கட்சி
1)ஆயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
.
2)சமஸ்கிருத மொழியை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுத்தரப்படுவது உறுதி செய்யப்படும்.
3)அழியும் நிலையில் இருக்கும் மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4)சபரிமலை தொடர்புடைய நம்பிக்கை, மரபு, வழிபாடு ஆகியவற்றை விரிவாக உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துரைப்பதை உறுதி செய்வதற்காக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நம்பிக்கை தொடர்புடைய பிரச்சனைகளில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கப் பாடுபடுவோம்.
5)ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும்

காங்கிரசு கட்சியின் அறிக்கையில்..
1). படைப்பாற்றலின் சதந்திரத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்படும்.
2)கலைத்துறையினரின் சுதந்திரம் உறுதி செய்யப்படும். தணிக்கை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அதனை தடுக்க நினைக்கும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
3) பதிப்புரிமை சட்டம் வலிமையாக்கப்படும்.
4)   ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்து அவ்வாறே நீடிக்கும். எந்த மாற்றமும் அதில் ஏற்படுத்தப்படாது.

( நன்றி . பிபிசி தமிழ்)