Thursday, January 17, 2013

பொங்கல் வாழ்த்துச் சடங்குகள்




பொங்கல் வாழ்த்து சொல்வது வெறும் சடங்காகிப் போனதா?
எனக்கென்னவோ சில வருடங்களாக அப்படித்தான் தோன்றுகிறது.

முன்பெல்லாம் பொங்கல் வாழ்த்து சொல்ல நண்பர்கள் உறவினர்கள்
என்று தொலைபேசி அழைப்புகள் ..
தொலை தூரத்திலிருந்து ஒலிக்கும்  பாசமிகுந்தக் குரல்கள்
ஸ்நேகம் வளர்க்கும் விசாரிப்புகள் ... மனசு மத்தாப்பாய் மலர்ந்து சிலிர்க்கும்.
அண்மைக் காலங்களில்.. அதுவும் கைபேசிகள் வந்தப் பின்
எல்லோரும் ஊமையாகிவிட்டார்களோ என்ற பயம் வந்துவிட்டது.

அதுவும் எப்போதும் பேசுபவர்கள் கூட..
இப்போதெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பிவிடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக அந்தக் குறுஞ்செய்திகளும், மின்னஞ்சல் வாழ்த்துகளும்
எனக்கே எனக்கானவை மட்டுமல்ல, ஏதோ அந்தக் காலத்தில்
தந்தி கொடுக்கும் போது சில குறிப்பிட்ட எண்களின் மூலம்
வாழ்த்துச் செய்தி அனுப்புவார்களே அதுபோல...
அந்த மாதிரி வாழ்த்து செய்திகளை வாசிக்கும் போது
அதிலும் குறிப்பாக நமக்கு ரொம்பவும் நெருக்கமான ( அதாவது நாம்
அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள்..!!!) இந்த மாதிரி
ஒரு ரெடிமேட் குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ அனுப்பினால்
மகிழ்ச்சிக்குப் பதிலாக கோபம் வருகிறது..
எரிச்சல் வருகிறது.
இப்படி ஒரு வாழ்த்து அனுப்பி இருப்பதற்கு
நீ
அனுப்பாமலேயே இருந்திருக்கலாமே
என்னைப் போல...
என்று சொல்ல நினைக்கிறது மனம்.

நினைப்பதெல்லாம் சொல்ல முடிவதில்லை.

சொன்னால் புரிந்து கொள்ளும் நிலையில்
சிலரும் இல்லை.


ஒரு 25 வருடங்களுக்குப் பின்னோக்கி இந்தப் பொங்கல் வாழ்த்துகளை
எண்ணிப் பார்க்கிறேன்.. என் தந்தைக்கு பொங்கல் வாழ்த்துகள் அட்டை
அஞ்சலில் வரும். நிறைய கவிதைகளுடனும் சில அச்சிட்ட வாழ்த்து
கவிதைகளுடனும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும்
வாழ்த்து  மடல் வந்திருக்கும். எனக்கு அதெல்லாம் ரொம்பவும் ஆச்சரியமாக
இருந்தது. அப்பாவுக்கு அந்த அட்டையில் கையெழுத்திட்டிருக்கும்
ஒவ்வொரு எழுத்தும் புள்ளியும் சொல்ல முடியாத மகிழ்ச்சியைக்
கொடுத்தது என்பதை அதைப் பிரித்து வாசிக்கும் போது நேரில் பார்த்தவர்கள்
புரிந்து கொள்ள முடியும். திராவிட இயக்கத்திலும் அறிஞர் அண்ணாவின்
திமுக அரசியலிலும் இருந்தவர் என் அப்பா. அக்காலக்கட்டத்தில் திருச்சி
மாநாட்டில், சேலம் மாநாட்டில் என்று மாநாட்டில் சந்தித்த கொள்கை
உறவுகள்.. அவர்களுக்குள் அடிக்கடி கடிதப் போக்குவரத்துகள் இருந்ததாக
தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு தைப் பொங்கலுக்கும் அவர்கள் பரிமாறிக்கொண்ட பொங்கல் வாழ்த்துகள் அவர்கள் பரிமாறிக்கொண்ட
இனிய நினைவுகள்.. எப்போதாவது யாரிடமிருந்தாவது வாழ்த்து அட்டை
வரவில்லை என்றால் அவர் உயிருடன் இல்லை என்கிற இன்னொரு
செய்தியும் இந்த வாழ்த்து மடல்களின் ஊடாகவே பயணம் செய்ததை
நானறீவேன். அது என்னவோ என் தந்தை மறைவிற்குப் பின்
ஓரு பொங்கல் கழித்து அவருக்கு வரும் வாழ்த்து அட்டைகள் நின்று போய்விட்டன! என் தந்தையும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி இருக்க வேண்டும். ஓராண்டு அனுப்புவது நின்றபின் அவருக்கு வந்துக்கொண்டிருந்த
வாழ்த்து அட்டைகளும் தங்கள் மும்பை பயணத்தை நிறுத்திக் கொண்டதை
என்ன வென சொல்லட்டும்?


எனக்கும் வாழ்த்து அட்டை ஒருவர் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார்.
அவர்தான் மும்பையில் கண்ணதாசன் இலக்கியப்பேரவை அமைப்பாளர்,
தூரிகை என்ற காலாண்டு இதழின் ஆசிரியர் நாஞ்சில் அசோகன் அவர்கள்.
என் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். என் கவிதைகளின் தீவிர ரசிகர்.
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மராட்டிய மாநிலத் தலைவராக இருந்தார். அவர் 19-11-2006ல் மும்பையில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு ஒன்றை நடத்தினார். தன் கைப்பணத்தைப் போட்டுத்தான். அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அன்றைய மத்திய இணை அமைச்சராக இருந்த க. வேங்கடபதி அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் மும்பையில் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எனக்கும்
"புரட்சிக் குயில்" என்ற விருதை வழங்கினார். (என்னிடம் ஒப்புதலோ இசைவோ கேட்கவில்லை, !) அதன் பின் நான் அவரிடம் கோபித்துக் கொண்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதால் 'என்ன சார், நானெல்லாம் என்ன அப்படி புரட்டி பண்ணிட்டேனு இந்த விருது கொடுத்திருக்கின்றீர்கள்? என்று கேட்டேன். வழக்கம் போல அவர் புன்னகையும் அதெல்லாம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் சொல்லிவிட்டார். அதிலும் அவர் கொடுத்த விருதை நான் என் பெயருடன்
சேர்த்துக் கொள்வதில்லை என்ற வருத்தம் வேறு அவருக்குண்டு!!
அவர் ஒவ்வொரு வருடமும் எனக்கு பொங்கல் வாழ்த்தை கூரியரில்
சரியாக பொங்கல் அன்று கிடைப்பது போல அனுப்புவார். இந்த வருடம்
அந்தப் பொங்கல் வாழ்த்து வரவில்லை! ஏனேனில் அவர் உயிருடன் இல்லை.
அவர் இருக்கும் போதெல்லாம் அவர் அனுப்பிய போதெல்லாம் அந்த
வாழ்த்து அட்டையின் அருமையை நான் உணரவில்லை. அவருடைய
வாழ்த்து அட்டை வராத  இந்த வருடம் அந்த வெறுமையை வெற்றிடத்தை
உணர்கிறேன்.

குமணன் நங்கை இணையர்  ஒவ்வொரு வருடமும் பொங்கல் வாழ்த்து அனுப்புவார்கள்.
தற்போது  தமிழ் இலெமுரியா மாத இதழ் நடத்துவதால் அதிலேயே எல்லோருக்கும் சேர்த்து வாழ்த்து சொல்லிவிடலாமே என்று தனிப்பட்ட வாழ்த்து மடல்களைத் தவிர்த்திருக்கலாம்!

எப்படியோ வாழ்த்துகள் சொல்வது நின்று போய் வெறும் சொற்களாய்
ஊமையாய் உலா வருகின்றன.
பொங்கல் விழாக்கள் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்று
வண்ணமிகு அலங்கார அழைப்பிதழுடன் எதிரணிக்குப் போட்டியாக
களத்தில் நிற்பதைக் காட்டும் அடையாளமாய் சுருங்கிப் போய்விட்டது.
பொங்கல் வருகிறது போகிறது...

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே துணை

என்ற தைப் பொங்கலின் முழுமையான அர்த்தங்களை முழுவதும்
இழந்து நிற்பதை அறிந்தும் அறியாமலும் எப்போதும் போல
ஒவ்வொரு வருடமும் பொங்கல் வருகிறது போகிறது
தை அமாவசைச் சடங்கு சம்பிரதாயம் போல.




Wednesday, January 16, 2013

HER ONLY FAULT...


Her only fault was she got on the wrong bus!!! 

She was a student
She was 23
Her fault some people say because she boarded the wrong bus
And oh yeah
SHE WAS A GIRL
Six men raped her one by one and then used an iron rod to tear her vagina
Small intestine and large intestine came out
They left her to die on the road
Naked
Wounded
Exposed
Devastated
What’s more is that no one even turned to look at her
No one even bothered to throw a shawl on the ill-clad
ill-fated girl
She can never live a normal married life again
She Went into coma five times since 16th December
She was unconscious
Critical and hasn't been able to stop crying
But don’t worry
She wasn't your sister
She wasn't your daughter
But she could be. The brutality has to stop right here guys
These people deserve capital punishment for their heinous
Perverted act
She died yesterday Saturday 28th
December 2012
Rest in Peace? and I pray that her killers get the WORST punishment possible
This doesn't only happen in India..
But in every country around the world..
Is this how we treat our women?
It Makes me ashamed to even live on this planet today

If her death Touches YOU & you are against RAPE
Write: "R.I.P" and SHARE with friends

If YOU Support RAPE 
"IGNORE THIS POST" 
post from EDUCATION IN AFGHANISTAN

She was a student
She was 23
Her fault some people say because she boarded the wrong bus
And oh yeah
SHE WAS A GIRL
... Six men raped her one by one and then used an iron rod to tear her vagina
Small intestine and large intestine came out
They left her to die on the road
Naked
Wounded
Exposed
Devastated
What’s more is that no one even turned to look at her
No one even bothered to throw a shawl on the ill-clad
ill-fated girl
She can never live a normal married life again
She Went into coma five times since 16th December
She was unconscious
Critical and hasn't been able to stop crying
But don’t worry
She wasn't your sister
She wasn't your daughter
But she could be. The brutality has to stop right here guys
These people deserve capital punishment for their heinous
Perverted act
She died  Saturday 28th
December 2012
Rest in Peace and I pray that her killers get the WORST punishment possible
This doesn't only happen in India..
But in every country around the world..
Is this how we treat our women?
It Makes me ashamed to even live on this planet today

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/582492_10151329401028430_1633279599_n.jpg

Thursday, January 10, 2013

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும் ==






கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில்
சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு
குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது.
அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும்
அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத பய உணர்வை
ஏற்படுத்தி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஈஸ்வரி தங்கபாண்டியன் அவர்கள் " எனக்கு அச்சமாக இருக்கிறது,
பத்து வயது கூட நிரம்பாத என் பெண் குழந்தை பள்ளிக்கூடத்திலிருந்து
வீட்டுக்கு திரும்பும் வரை கடந்த இரண்டு வாரங்களாக நிம்மதியின்றி
தவிக்கின்றேன். ஸ்கூல் பஸ்ஸில் என்ன நடக்குமோ? விளையாட அனுப்பினால் என்னவாகுமோ? ஏன் இப்போதெல்லாம் சுதந்திரமாக
பேருந்தில் டிரெயினில் பக்கத்து ஸீட்டில் இருப்பவர் நம் பெண்குழந்தையை
எடுத்து மடியில் வைத்துக் கொண்டால் இந்த மனம் பதைபதைத்து போகிறது,
இவ்வுணர்வு ஒரு சித்திரவதை!" என்றார்.

இன்னொருவர் லட்சுமி , அவர் ரொம்பவும் சாதாரணமாக ஒரு கேள்வியைக்
கேட்டுவிட்டு அமர்ந்தார்.. தெரியாதவன் பெண்ணை பலவந்தப்படுத்தினால்
பாலியல் வன்புணர்வு? தெரிந்தவன், அதிலும் தாலி கட்டியதாலேயே எப்போதும் மனைவியை பாலியல் உறவுக்குத் தள்ளும் சர்வ வல்லமைமிக்க அதிகாரம் கொண்ட எத்தனைக் கணவன்மார்கள், தங்கள் அதிகாரத்தைக் கொண்டு காலமெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் தெரியுமா?
இதற்கு என்ன பெயர? இதைப் பாலியல் வன்புணர்வு என்று சொன்னால்
எவன் ஒத்துக்கொள்வான்? காலமெல்லாம் மனைவி என்ற சமூக அந்தஸ்த்திற்காக எத்தனைக் கோடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகிரார்கள் தெரியுமா? என்று கேட்டார்.

அவருக்குப் பெண்ணியம் குறித்தெல்லாம் எதுவும் தெரியாது தான்.
ஆனால் அவர் சொன்ன இக்கருத்து இச்சமூகத்தின் முகத்தில்
ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. என் இனிய தோழி ஆழியாளின்
கவிதை அப்போது நினைவுக்கு வந்தது.

காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில்

தந்திக் கம்பத்தருகே
கால்தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்

அதன் கண்கள் நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று.
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை எனக்குள் உணர்த்திற்று.

அழகி மண்ணம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்குமென
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்"

தோழி துர்க்கா ராஜன் அவர்கள் ஒரு பேச்சாளராகவோ எழுத்தாளராகவோ நான் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வரவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு நானும் தாய், என் அச்சத்தை என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் என்றார். என் பெண் குழந்தையிடம் இப்போதெல்லாம்
அடிக்கடி அவள் உடல் குறித்த அடிப்படை அறிவியலைச் சொல்லிக்கொடுக்கிறேன். யாராக இருந்தாலும் உன் உடலைத் தொட்டுப் பேச அனுமதிக்காதே என்ன்று வேறு சொல்லி வைக்கிறேன். அவளோ குழந்தை,
எந்தளவுக்கு நான் சொல்வதை உள்வாங்கிக் கொள்கிறாளோ தெரியவில்லை.
அடிக்கடி குழந்தையிடம் இப்படி பேசுவது சரியா? என்று வேறு கவலையாக
இருக்கிறது. ஆனால் நம் பெண் குழந்தையைப் பாதுகாப்பது நம் கடமைதானே
என்றார். மேலும்,
 தன் பேச்சில் டில்லி பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் யாருடைய தூண்டுதலுமின்றி பொதுமக்கள் சாலைகளில் இறங்கிப் போராடியதையும் பொதுமக்களின் போராட்டக்குணம் சரியான வழியில் வழி நடத்தப்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்றும் பேசினார்.

இலெமுரியா அறக்கட்டளை மற்றும் இலெமுரியா பத்திரிகை சார்ந்த
நங்கை குமணன் அவர்கள் " குற்றவாளிக்குத் தூக்குத்தண்டனை விதிப்பது
மட்டும் தீர்வாக முடியுமா? ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் விழுமியங்கள்
அது குறித்த கல்வி, விழிப்புணர்வு இவை மட்டுமே இப்பிரச்சனை குறித்த
தொலைநோக்குத் திட்டங்களாகவும் தீர்வாகவும் இருக்க முடியும் என்று
ஆணித்தரமாக பேசினார்.

மலையாள எழுத்தாளர் மானசி அவர்கள் நிலவுடமை சமூகமும் அதன்
சமூக நியதிகளும் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஆட்சி செய்து கொண்டு
இருப்பதன் வெளிப்பாடு தான் இம்மாதிரி சம்பவங்கள் என்று சொன்னதுடன்
தங்கள் கேரள மண்ணில் மாலை 6 மணிக்குப் பின் தன்னால் சாலையில் தனியாக நடப்பதைக் குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிற
இன்றைய நிலையையும் வருத்தத்துடன் பதிவு செய்தார்.

அதன் பின் கூட்டத்திற்கு வருகைத்தந்திருந்த வழக்கறிஞர் இராசாமணி,
எழுத்தாளர் தமிழ்நேசன், சரவணன், தமிழ்ச் சங்கம் பரணி . தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பால்வண்ணன் ஆகியோர்
விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே ( புறம் 187)

என்ற அவ்வையின் வரிகளை மேற்கோள் காட்டி பால்வண்ணன் அவர்கள்
பேசினார்.

மக்கள் நலம், பாதுகாப்பு, நாட்டின் நலம் எல்லாம் ஓர் ஆடவன் நல்லவனாக
இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது நடைமுறையாகக் கூட இருக்கலாம்,
ஆனால்,

வாழ்க்கையின் விழுமியங்கள், நியாயம் அநியாயம், நல்லது கெட்டது,
எல்லாவற்றையும் தீர்மானிப்பது  நம் சமூகத்தில் ஆண்களாக மட்டுமே
இருப்பதால் தான் பெண் இரண்டாம் பால்நிலையாகத் தள்ளப்பட்டிருக்கிறாள்.

அதனால் தான்,

5 வயது பெண் குழந்தையைக் கூட பாலியல்  வன்புணர்வுக்குள்ளாக்கும்
ஆண்கள் சொல்கிறார்கள்,

பெண்களின்  மேற்கத்திய நாகரிக உடைகள் தான்  காரணம் என்று!

பாலியல் வன்புணர்வுக்கு வந்தவனிடம் " சகோதரனே!" என்றழைத்திருந்தால்
அவன் மனம் மாறி இருப்பானாம்! இப்படியும் உளறிக்கொட்டும் தலைவர்கள் இருக்கிறார்கள் எங்களைச் சுற்றி!

பாலியல் வன்புணர்வு இந்தியாவில் நடக்கிறது, பாரதத்தில் நடக்கவில்லை
என்று புதிதாக கண்டுபிடித்து அறிவிக்கிறது இன்னொரு அமைப்பு.

அதாவது நகரங்களில் நடக்கிறதாம், கிராமங்களில் நடப்பதில்லையாம்!
ஆமாம், அவர்களைப் பொறுத்தவரை கிராமங்களில் நடக்கும் வன்புணர்வுகள் எல்லாம் அவர்களின் சாதியச்சடங்குகள் தானே! வெட்க கேடு..

இவர்களை எல்லாம் தலைவர்களாகவும் இவர்களின் அமைப்புகளை எல்லாம்
வளரவிட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களில் நானும் ஒருத்தியாக இருப்பது , எனக்கும் அவமானம்!

அதிகரித்து வரும் இம்மாதிரியான சமூக இழிவுகளுக்கு ஒருவகையில்
வர்க்க பேதமும் காரணம், உயர்தர வர்க்கம், நடுத்தரவர்க்கம், அடிநிலைவர்க்கம் என்ற மூன்று வர்க்க நிலைகளில் நடுத்தர வர்க்கத்திற்கும்
அடிநிலை வர்க்கத்திற்கும் இடையில் தீடீரென அண்மைக் காலங்களில் அதிகரித்து இருக்கும் இடைவெளி, உலகப் பணக்காரர்கள் வாழும் இந்தியாவில் தான் அதிகமாக வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மனிதர்களும்
'வாழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டிய வலது இடது சாரிகள்
உப்புச் சப்பில்லாத தீர்மானங்களை நிறைவேற்றி ஏதோ நாங்களும் இருக்கிறோம் என்று கடை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கம்

 


     `                                                                                                                                                      06th Jan 2013 ம் தமிழ்ச் சங்கம், சயான், , மும்பையில் தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமம் ஏற்பாடு செய்திருந்த 26வது அமர்வின் சிறப்பு கருத்தரங்கமாகமும் பொதுமக்களின் கருத்துப் பரிமாறலுடன் நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டு அனைவரின் ஒப்புதலுடன்  இந்த அறிக்கை, 
இந்தியக் குடியரசு தலைவர், இந்தியப் பிரதமர், மராட்டிய மாநில கவர்னர்,
தமிழக முதல்வர் மற்றும் கவர்னர், மனித உரிமை ஆணையம், அம்னெஷ்டிக் ஆசிய அமைப்பு  மற்றும்
நீதிபதி வர்மா கமிட்டிக்கும் அனுப்பட்டுகிறது.

2006 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 29.3% ஆக அதிகரிட்துள்ளன.
. பாலியல் தாக்குதல் மற்றும் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.
, 2010 இல் பதிவு 94.000 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது  ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  ஏழு பெண்கள் / குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிறார்கள்.
ஏழைகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட  பிரிவுகளை சேர்ந்த. பழங்குடி மற்றும் தலித் பெண்கள் மீது குறிப்பாக பாலியல் தாக்குதல்கள் பெருமளவில் பதிவு செய்யப்படாமலேயே இருக்கின்றன.

தேசிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் பதிவு செய்திருக்கும்
புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தருவதாகவும் கவலை அளிப்பதாகவும்
இருக்கின்றன.

குறிப்பாக,

1 மக்களவை தேர்தல் 2009 ல், அரசியல் கட்சிகள்,  கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தங்கள் வாக்குமூலங்களை அதாவது affidavit  கொடுத்திருந்த 6  ஆறு வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்திருந்தார்கள்..


2. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்சிகள்  கற்பழிப்பு குற்றச்சாட்டைப் பதிவு செய்து வாக்குமூலம் கொடுத்திருந்த 27 பேருக்கு டிக்கெட் கொடுத்து
தேர்தல் களத்தில் நிறுத்தி இருந்தார்கள்.


3. பெண்ணை அவமதித்தல் .,  தாக்குதல், என்ற  பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள் 260 பேர் பல்வேறு பிரிவுகளின் கீழ் பொறுப்பேற்றிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தேர்தலில்
போட்டியியிடும்  வேட்பாளர்கள் இருந்ததை நினைவுபடுத்துகிறோம்.

எனவே,
அனைத்து அரசியல் கட்சிகளும்், பாலியல் வன்முறை சம்பவங்களில் தண்டனைப் பெற்றவருக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கோ
தேர்தலில் வேட்பாளாராக நிறுத்துவது தடை செய்யப்படுவதுடன்
அதைச் சட்டமாகவும் கொண்டுவர வேண்டும்.


டிவி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் பெண்களை இழிவப்படுத்தும் வகையில் காட்டும் காட்சிகளைத் தணிக்கைக்கு உள்ளாக்குவதுடன்
ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தையும்
இக்கருத்தரங்கம் வற்புறுத்துகிறது.

பாலியல் குற்றத்தில் சர்வதேச சட்டவிதி  1998ல் ரோம் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்  அதிரடியான மாற்றங்களைப் பெற்றது.. அதன் 7வது ஷரத்தின் படி

"பாலியல் வன்கொடுமை, பாலியல் அடிமைத்தனம், கட்டாய கர்ப்பம்,
கட்டாய கர்ப்பத்தடை அல்லது எந்த வகையிலும் பெண்கள் மீது
நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை சர்வதேச சட்டப்படி குற்றமாகும்.


பெண்களுக்கு எதிரான இம்மாதிரியான  குற்றச்சாட்டுகளை
அணுகுவதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்\
ஒரு நிலையான கட்டுக்கோப்பான அணுகுமுறை இருக்க வேண்டும்.
குறிப்பாக சிலவற்றை இந்தக் கருத்தரங்கம் பரிந்துரை செய்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் தன் வழக்கைப் பதிவு செய்ய முன்வரும்போது
அவருடைய விருப்பத்திற்கேற்ப அவருடைய வீட்டிலோ அல்லது
வேறு பொருத்தமான இடத்திலோ போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கட்டாயம் அப்பகுதியைச் சார்ந்த பெண்கள்
அமைப்பின் சமூக சேவகி உடனிருத்தல் நல்லது.

பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவர் சார்பாக சாட்சியங்களோ
சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய உதயத்திற்கோ பின்னரோ
காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படும் நடைமுறை
வழக்கத்தை உடனடியாக நிறுத்துவத அவசியம்.


பாதிக்கப்பட்டவர் FIR கொடுத்து  24 மணி நேரத்திற்குள் காவல்துறை
நடவடிக்கை எடுத்திருக்க  வேண்டும்.

இவ்வழக்குகளில் சட்ட விதிகளைத் தளர்த்தியோ குற்றவாளிக்குச் சாதகமாகவோ அல்லது விதிகளை மீறியோ செயல்படும் அதிகாரிகள்
கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லும் காலவரையறை
மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்துவது அவசியம்.
வாச்சாத்தி வழக்கில் நீதி கிடைக்க 19 வருடங்கள்
காத்திருந்ததை நினைவு படுத்துகிறோம்.
குறைந்தது 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் வழக்கு நீதிமனறத்தின்
முடிவுக்கு வரவேண்டும்.
அதாவது நீதி கிடைப்பதில் காலதாமதம் கூடாது.
தாமதமாகக் கிடைக்கும் நீதியும ஓர் அநீதி தான்.
் குற்றங்கள் அதிகரிப்புக்கஇதுவும் ு ஒரு காரணம்

மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை குற்றவாளிக்கு ஜாமீன்
கொடுப்பதொ பெயிலில் வெளிவருவதோ எக்காரணத்தைக் கொண்டும்
இச்சட்டம் அனுமதிக்க கூடாது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நிலுவையில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் உடனடியாக விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும்.


பெண்குழந்தைகளுக்கு சுயபாதுகாப்பு பயிற்சி அளிப்பதை ஒவ்வொரு
வகுப்பிலும் கட்டாயமாக்க வேண்டும்.

பாலினம் சார்ந்த படிப்புகள் அனைத்து கல்வி பாடத்திட்டங்களிலும் கட்டாயப் பாடமாக்கப்படுவதுடன் பெண்ணை அணுகுவது பழகுவது குறித்த அடிப்படைக்\
கல்வியை ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில்
நம் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


ஓட்டு அரசியல் காரணமாக அரசியல் கட்சிகள் சட்டங்களைப் புறக்கணித்து
கட்டைப்பஞ்சாயத்து சட்டங்களை மவுனமாக கண்டும் காணாமல் இருக்கும்
போக்கும் சாதியமும் பெண்ணடிமைத்தனமும் ஊறிப்போன இந்திய சமூகத்தில்
பாலியல் குற்றவாளிகளுக்கு பெரும் கவசமாக இருக்கின்றன.
அதிகாரம், பதவி பணபலம் சாதியம் என்று எந்த சக்தியாலும் அசைக்கமுடியாத நீதியைப் பெண்களுக்கு வழங்குவதன் மூலம்
மக்களாட்சியும் மனித உரிமையும் ஒளிரும்.
நடு இரவிலும் பெண் ஒருத்தி இந்தியாவில் எங்கும் தனியாகப் பயணம்
செய்யும் உரிமையை அனுபவிக்கும் வரை நம் சுதந்திரம் ஒரு கேள்விக்குறி.
நம் சட்டம் ஒரு இருட்டறை.

மக்களுக்கான மக்கள் பாதுகாப்புக்கான மக்கள் நல அரசு வேண்டிய பயணத்தில் எங்கள் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வீர்கள்
என்று நம்புகிறோம்.