வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல.
Saturday, May 29, 2021
வைரமுத்து ONV விருது சர்ச்சைகள்
Wednesday, May 26, 2021
மகாத்மா காந்தி.. India's first corporate Agent
இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஏஜெண்ட்
என்று மகாத்மா காந்தியைப் பற்றி அருந்ததிராய்
கிண்டலடிக்கிறார்.
Monday, May 24, 2021
பரவசமும் பரிதவிப்பும்
புரட்சிக்கவியில் புரட்சிக்கவி சொன்ன சொக்கவெள்ளிப் பால்குடம் எப்படி இருக்கும்? காலை விடியலில் கடலில் மூழ்கி சிவப்பு மங்கி மஞ்சளாகி வெளிச்சமாகும் அக்கணம்.. காதலுக்குப் பூரண பொற்குடம் வைத்து இரவுக்கு நன்றி சொல்லும் பொழுதாக இருக்குமோ…?
பொற்குடமாம்.. அதிலும் பூரண பொற்குடமாம்.. அள்ள அள்ள குறையாத ஓளி மங்காதப் பொற்குடம். பொற்குடம் நிரம்பி பூமி எங்கும் மரங்களாக பூக்களாக பறவைகளாக அவனுக்குள் அவள் பொற்குடமாகும்போது காதல் மட்டுமல்ல வாழ்க்கையும் பூரணத்துவம் பெறுகின்றது. அதனால் தான் மனித இனம் தேச இன மொழி எல்லைகளைக் கடந்து எப்போதும் காதலைக் கொண்டாடுகிறது, .
வாழ்தல் என்பது உண்டு உறங்கி காமப்பசி தீர்க்க தின்று முடிவதல்ல. காதலிருக்கும் வாழ்க்கை மட்டுமே பூரணத்துவம் பெறும். . அவள் பூரண பொற்குடமாய், அவன் வாழ்வில் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை..
அவள் யார் என்பதைச் சொல்லவரும்போது அவன் சொற்களின் வனத்தில் மாட்டிக்கொண்ட திசையறியாத பயணியைப் போல அலைகிறான்.
சொற்களிலிருந்து தப்பிக்கவும் ஒருசொல் தான் தேவை உன் பெயரைப் போல (பக் 57) என்று அறிந்து கொள்ளும் போது அவள் பறவையாகிவிடுகிறாள்.
என்ன இது… அவன் உள்ளங்கை நீல வானமாகிவிடுகிறதே..
ஒரு பறவையைப் போல உனை விடுவித்தேன். என் அகங்கை முழுவதும் ஆகாய நீலம். (பக் 40) அவன் உள்ளங்கையே ஆகாயமாக்கியவள் எங்கு சென்றாள்..!
“சிறகுகளால் திசைகளை உதறிவிட்டு நீலவெளியில் ஏன் கரையவேண்டும்?” (பக் 18) அசைவின்மையை முகர்ந்தபடி இருக்கிறது தும்பி. அவள் விரல்பிடித்து சாலையைக் கடக்கிறது நத்தை. அவனோ கவிஞன்…
“வானும் இல்லை
பூமியும் இல்லை
அந்தரத்தில் ஒன்றாகப் பயணிக்கின்றன
பரவசமும் பரிதவிப்பும்.” (பக் 76)
அவன் என்ன செய்வான்? மரத்தில் காற்றில் பனித்துளியில் சிறகுகளின் படபடப்பில் அவன் அவளுடனேயே பயணிக்கிறான். தூரிகை, எழுதுகோல், மயிலிறகு, மலர்ப்படுக்கை எதைக்கொண்டு அவளை அலங்கரிப்பது? “பொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது..”
இரைை தேட சென்ற அவன் திரும்பவில்லை என்றால் அவள் இறந்துவிடுவாள்… அவனின்றி அவள் இல்லை. இருவாச்சி பறவைகளின் வாழ்க்கையை அறிந்தவள் அவள்… அதனால் தான் அவள்
“ பறந்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட வேண்டும்” என்று துடிக்கிறாள். .
“இரத்தம் வழிய கைகளில் ஏந்துவதைத் தவிர கண்ணாடிக்கோப்பைகள் உடையும் போது அவனால் என்ன செய்ய முடியும்?
அவன்் கவிஞன். சொற்களற்ற பாடலை அவனில் எழுதிக் கொண்டிருப்பவள் அவள் தான் .. அவன் கவிதை இன்னும் முடியவில்லை. “
வந்து சேராத ஒருசொல் காத்திருக்க வைத்திருக்கிறது எல்லாச் சொற்களையும். (பக் 64) …
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அவன் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை மையமாக அவளே இருக்கிறாள்
“இரு கண்களாலும்
காணண இயலாத
நெற்றியின் மத்தியில்
நின்றெரிகிறாள் “
எரியட்டும். ….
கவிஞர்பழநிபாரதிக்கு வாழ்த்துகள்
கவிதைை நூல்: பூரண பொற்குடம்
கவிஞர் பழநிபாரதி..
கொன்றை வெளியீடு:
விற்பனை உரிமை: தமிழ்வெளி
கைபேசி: 9094005600
Wednesday, May 19, 2021
CPI (M) மாநிலக்கட்சியாகிறதா?
காலம் இப்படித்தான் நைனா... (கி..ரா.. )
எந்த அறிஞர் அண்ணாவைப் பற்றி
நாலு வார்த்தை உங்களுக்குப் பேச வரலியோ...
Sunday, May 16, 2021
காதலும் கம்யுனிசமும் ( தோழர் கவுரியம்மாவை முன்வைத்து)
காதலும் கம்யுனிசமும் இரண்டும் மிகவும் நெருக்கமானவை.
ஒவ்வொரு இட துசாரிக்குள்ளும் ஒரு தீவிரக்காதல்
உள்ளம் காதலித்துக்கொண்டே இருக்கிறது.
Tuesday, May 11, 2021
MADAM CM VS 1 (NUMBER ONE) VS POWER
1 (one) vs
madam CM in power house
இரண்டு திரைப்படங்கள்.
1 நம்பர் ஒன் தான் ம ம்முட்டி யின் நடிப்பில்
நிமிர்ந்து நிற்கும்
மலையாள திரைப்ப டம். முடிவெட்டும் அப்பாவுக்கு
மகனாகப் பிறந்த
கடக்கல் சந்திரன் கேரளாவின் முதல்வராகி தன்
அரசியல் கனவுகளில்
என்னவெல்லாம் செய்கிறார், எதைச் செய்ய
முடியாமல் போகிறது
என்பதை முன்வைக்கும் கதையோட்டம்.
அச்சு அசலில் நம்
அரசியல் வாதிகள் சிலரின் உடல்மொழியைக்
கொண்டுவந்திருக்கிறார்
ம ம்முட்டி. அது ரசனைக்குரியதாகிறது.
எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட
வேட்பாளரும் அவருடைய ஜன நாயக க்
கடமையை அதாவது
தொகுதி மக்களின் மேம்பாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அவர்களை பதவியிலிருந்து
இறக்கும்
துருப்புச்சீட்டும்
அதாவது உரிமையும் அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய
தொகுதி மக்களுக்கு
உண்டு. தொகுதியில் 50% விழுக்காடு மக்கள் அவர் மீது
அதிருப்தி காட்டினால்
அவர் பதவி விலக வேண்டும். இது right to recall உரிமை. அரசியலில் பகை, தனி மனித தாக்குதல்கள்,
பணத்திற்கு விலை
போகும் தொகுதி
மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டுகளை முடிவு
செய்யும் சுயசாதி
அபிமானம்… இதெல்லாம் இருக்கும் இந்திய அரசியலில்
கடக்கல் சந் திரம்
ஒரு கனவு.
இனிமையான கனவு.
கனவுகள் நிஜமானால் இனிமையாக இருக்கும்
என்ற இன்னொரு கனவுக்குள்
நம்மைத் தள்ளும் 1, the only one
கதையில் நிறைய
ஓட்டைகள். இருந்தாலும் இந்தக் கனவு நமக்கு இன்று
தேவைப்படுகிறது.
அரசியலில் யதார்த்தம் என்னவாக இருக்கிறது?
MADAM, CHIEF MINISTER
இந்தி திரைப்படம்.
இதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அரசியல் தலைமை.
ஆனால் பெரிய வேறுபாடு
இவர் பெண், அதுவும் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் தலித் பெண். இவருடைய அரசியல் பயணம்,
தாராவாக நடிக்கும்
ரிச்சா சட்டாவின் பாப் கட், கதை, கதையில் வரும்
மாஸ்டர் இவை எல்லாம்
உத்திரபிரதேசத்தின் மாயாவதி, கன்சிராம் இருவரையும் நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகிறது.
அதிகாரத்திற்கு
வரும் வரை பேசக்கூடிய சமூக அறங்களை ஆட்சி
அதிகாரத்திலிருக்கும்
போது கடைப்பிடிக்க முடிவதில்லை!
அதிகாரத்தின் மாற்றமுடியாத
குணாதிசியம் இதுதான்.
இக்கதையில் ஆட்சி
அதிகாரத்தில் அமர்பவள் பெண், அதிலும் தலித்
பெண். அவளும் என்னவாகிறாள்?
அதிகாரத்தை தொடர்ந்து வசப்படுத்த
அதிகாரத்தின் இரத்தப்பசிக்கு
தீனி போட வேண்டி இருக்கிறது.
அவள் அதைச் செய்கிறாள்..
முதல் பட த்தின்
இனிமையாக கனவுகள் இதிலில்லை.
நிஜங்கள் கனவுகளைப்
போல இனிமையானதாக இருப்பதில்லை.
இரண்டு படங்களையும்
அடுத்தடுத்துப் பார்த்தேன்.
இரண்டு
படங்களும் அரசியல் டிராமா கதைகள்.
ஒன்று
இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறது.
இப்படித்தான்
இருக்கிறது என்று இன்னொன்று சொல்கிறது.
MADAM
cm இந்திய அரசியலைக் காட்டி என் முகத்தில் அறைகிறது.
மெல்ல
மெல்ல அதை மறக்க நினைக்கிறேன்.
மம்முட்டியின்
கனவுகள்.. விரிகின்றன.
கனவுகள்
தான் இனிமையானவை.