பிச்சி:
Saturday, December 25, 2021
பிச்சி
பிச்சி:
Thursday, December 23, 2021
தாராவியில் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே மேடையில்
தாராவியில் தந்தை பெரியாரும்
ஊழலற்ற அரசியல்வாதியின் நினைவு நாள்
இன்று கக்கனின் நினைவு நாள்.
ஊழலற்ற அரசியல்வாதி
என்பதை மொழிபெயர்த்தால்
அதில் கக்கன் என்று
எழுதி இருக்கும்.
கக்கன் என்று சொன்னவுடன்
காமராசர் அமைச்சரவையில்
அமைச்சராக இருந்தவர்
, காங்கிரசு கட்சியின் தலைவர்,
எளிமையாக வாழ்ந்தவர்,
மதுரை கோவிலில் ஒடுக்கப்பட்ட
மக்களுடன் ஆலயப்போராட்டம்
செய்து வழிபட்ட கலகக்காரர்.
அமைச்சர் பதவியில்
இருந்தக் காலத்தில் ஒருமுறைக்கூட
தன் பதவியை முறைகேடாக
பயன்படுத்தவில்லை,
அரசு தனக்கு ஒதுக்கி
இருந்த வீட்டில்
அவர் உறவினர்களுக்கு
அனுமதி இல்லை, அரசு அவருக்கு
கொடுத்திருந்த
வாகனத்தில் அவர் உறவினர்கள் பயணிக்க
அவர் அனுமதித்தது
இல்லை. மதுரை அரசு மருத்துவமனையில்
தரையில் படுத்து
சிகிச்சை பெற்ற ஒரே அமைச்சர்.
சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்கள்
சிகிச்சைப் பலனின்றி
1981, டிச 23ல் மறைந்தார்.
இன்று கக்கனின்
நினைவு நாள்.
கக்கன் என்று சொன்னவுடன்
அவருடைய மேற்கண்ட எதுவும்
முன்னிலை பெறாமல்
அவர் சாதி அடையாளம் மட்டுமே
முதல்வரியாக நினைவுக்கு
வரும் சாதி உளவியலில் இருந்து
நாம் விடுதலை பெறவில்லை.
அம்பேத்கரும் கக்கனும்
இன்னும் சாதி கடந்து
கொண்டாடப்படவில்லை.
Tuesday, December 21, 2021
அண்ணாவின் அசாத்தியமான உழைப்பு
"ஒரு மாதத்தில் 145 கூட்டங்கள்,
ஒரு நாளில் 27 கூட்டங்கள்!
ஒரு மனிதனின் அசாத்திய உழைப்பு"
Thursday, December 16, 2021
ரஜினிகாந்த் .. தனித்துவம்.
நானும் ரஜினிகாந்தை ரசிக்கும் ஒரு புள்ளி உண்டு.
இப்போதும் அவர்
அதில் தனித்து நிற்கிறார்.
அவர் சினிமா உலகின்
சில நட்சத்திர பிம்பங்களை
பொதுவெளியில் உடைத்தவர்.
அதற்கு தனித்துணிச்சல்
வேண்டும். அது
எப்படி வந்தது???
சினிமா நடிகர்
என்றால்…
சிவப்பா இருக்கனும்.
முகச்சுருக்கமே
இருக்க முடியாது.
நரைமுடி அவர்களுக்கு
எட்டிக்கூடப் பார்க்காது.
எப்பொதும் பளபளனு
இருக்கனும்
அதைத் தொடர்ந்து
காப்பாற்றியாகனும்.
இப்படி எல்லாம்
திரையில் மட்டுமல்ல
பொதுவெளியிலும்
தன்னை மேக்கப்புடன்
காட்டுவதில் அதீத
அக்கறை கொண்டிருக்கவேண்டும்.
இதெல்லாம் ரொம்ப
ரொம்ப முக்கியம்.
ஆனால் இவை அனைத்தையும்
உடைத்தவர்
ரஜினிகாந்த் மட்டும்
தான்.
அவர் பொதுவெளியில்
முன்வழுக்கையுடன்
மேக்கப் போடாத
முகத்துடன் ஏறி நிற்கிறார்.
அவருடைய ரசிகர்கள்
அதைக் கொண்டாடி
விசில் அடிக்கிறார்கள்.
அப்போதுமட்டும் அவருடைய
ரசிகர்களையும்
எனக்குப் பிடிக்கிறது.
சரவணா… சிரிக்காதே!
இதில் கொண்டாடவும்
ரசிக்கவும் என்ன இருக்கிறது?
என்று நினைக்கிறாயா..?
தமிழ் நாட்டில்
தலைவர்கள் இன்றும் தலையில்
“விக்” அணிந்து
கொள்கிறார்கள்.
இந்த விக் அணியும்போது
காதோரம்
நரைத்த மயிர் (அது
என்னய்யா..கிருதாவா)
எட்டிப்பார்ப்பது
கொஞ்சம்
விசித்திரமாக இருக்கிறது.
இன்னும் சில இரண்டாம்
மூன்றாம் நிலை
தலைவர்கள்… வயிற்றை
பெல்ட் போட்டு இறுக்கி
மூச்சடக்கி போட்டோவுக்கு
போஸ் கொடுப்பது
அதைவிட பரிதாபமாக
இருக்கிறது.
தலைவர்களின் தலைமுடி
கலைந்திருப்பதே
இல்லை. (என்ன ஜெல்
பயன்படுத்துகிறார்கள்
என்று தெரியவில்லை!)
இப்படியான சமூகத்தில்
தோற்றம் முக்கியத்துவம்
பெறும் சினிமா
உலகின் (சூப்பர் ஸ்டார்) நடிகர்
அதை உடைத்திருப்பது
அவருடைய தனித்துவம்.
அவருடைய தன்னம்பிக்கை.
இதுவும் அவர் ரசிகர்களின்
உளவியலுடன் தொடர்புடையது
என்பது இதன் அடுத்தக்கட்டம்.
60, 70 வயதில்
நம் நடிகர்கள் இளம்வயது நடிகையுடன்
டூயுட் பாடவைத்து
அவர்களை சினிமா உலகம்
தொடர்ந்து வீணடித்துக்கொண்டிருக்கிறது.
அவர்கள் வயதுக்கும்
அனுபவத்திற்குமான கதைகள்
சினிமா உலகில்
எட்டிப்பார்க்க இயக்கு நர்கள்
அனுமதிப்பதில்லையா?
தெரியவில்லை.
அந்த வகையில் இந்தி
திரையுலகில் நடிகர்
அமிதாப்பச்சனின்
வயதிற்கேற்ற கதைப்பாத்திரங்கள்
உருவாக்கப்பட்டு
அதில் அவர் இரண்டாவது இன்னிங்க்ஸ்
கொண்டாடப்பட்டது.
பாவம் நம் தமிழ் கதா நாயகர்களும்!
Tuesday, December 14, 2021
சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் பால்காரியும்
சத்ரபதி சிவாஜி மகாராஜாவும் அவளும்.
சத்ரபதி சிவாஜி
மகாராஜாவை கோட்டைகளின் மன்னாதி மன்னன்
என்று வரலாறு சொல்வது
மிகவும் சரி. அவர் ஆட்சிக்கு உட்பட்டவை சற்றொப்ப 360 கோட்டைகள் ) ஒவ்வொரு கோட்டைகளும்
அதைச் சுற்றி அவர்
அமைத்திருந்த பாதுகாப்பு அரண்களும்
கோட்டை மதில்களும்
அகழிகளும் மலையின் உயரமும் பூகோள
அமைப்பும் பிரமிப்பு
தருகின்றன. தன் நாட்டின் பூகோள ரீதியான
அமைப்பை தனக்கு
மிகவும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு
தன் சாம்ராஜ்யத்தை நிறுவிய அரசனாக சிவாஜி இந்திய வரலாற்றில்
முதன்மையானவராக
சிவாஜியை முன்னிறுத்தலாம்.
இன்றும் அவர் கோட்டைகள்
பார்வையாளர்களுக்கு பிரமிப்பூட்டுகின்றன.
ஆனால் சிவாஜியின்
கோட்டைகளை அதன் உயரங்களை அதன் காவல்
அரண்களை ஒரு சாதாரண
பெண் வென்றெடுத்தாள் என்பதும் அதை
சிவாஜி கொண்டாடியதுடன்
அவள் பெயரால் அதே கோட்டையில்
அவள் கடந்து சென்று
பகுதியில் ஒரு மதில் சுவறைக்கட்டினார் என்பதும்
புனைவல்ல, வரலாறு.
இது சிவாஜியின் தலை நகரான ராய்காட் கோட்டையின் கதை.
அவள் பெயர் ஹிர்கானி (Hirkani). அவள் ஆயர்குலப்பெண். ஒவ்வொரு நாளும் மலையடிவாரத்திலிருந்து பால் மற்றும் மோர் தலையில் சுமந்து வந்து கோட்டையில் கொண்டுவந்து விற்றுவிட்டு மாலையில் தன் மலையடிவார குடியிருப்புக்கு போய்க்கொண்டிருந்தவள், ஒவ்வொரு நாளும் மாலையில் கோட்டையின் கதவுகள் சூரிய அஸ்தமனத்திற்கு முன் சற்றொப்ப மாலை 6 மணியளவில் மூடப்பட்டுவிடும். அதற்குள் மலையடிவாரத்திலிருந்து கோட்டைக்கு வந்தவர்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அந்த வாயில் வழியாக இறங்கிவிடுவார்கள். ஒரு நாள் எதோ ஒரு காரணத்தால் பால்காரி ஹிர்கானிக்கு சற்று தாமதமாகிவிடுகிறது. கோட்டை வாயில்கள் மூடப்பட்டு’விட்டன. அவள் வாயில்காவலர்களிடம் மன்றாடுகிறாள்.ஆனால் பாதுகாப்பு மன்னரின் ஆணையை மீறமுடியாது என்று அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். வீட்டில் அவள் கைக்குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கிறாள். அவள் செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்கு எப்படியும்
தன் வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும்.
அவள் குழந்தையிடம் போயாக வேண்டும்.
அவள் அந்தக் கோட்டையின் மறுபக்கம் வருகிறாள்.
இருட்டிவிடுகிறது !
அங்கே மதில்கள் இல்லை.
காரணம் யாரும் ஏறவொ இறங்கவோ கற்பனை
கூட செய்யமுடியாத
செங்குத்தான கரடுமுரடான மலைப்பகுதி அது.
அவள் மலையேறி பயிற்சி பெற்றவளும் அல்ல.
ஆனாலும் அவள் குழந்தையின் முகம்
அந்த அழுகுரல் அவளை எதுவும் யோசிக்கவிடவில்லை.
அவள் அந்த ஆபத்தான
பகுதியின் வழியாக இறங்கி தன் வீட்டுக்குப் போய்விடுகிறாள்.. ! மறு நாள் காலை கோட்டையில்
வாயில் கதவு திறக்கும்போது அவளை அடையாளம் கண்டுவிட்ட கோட்டை வாயில்
காவலர்கள் நேற்று
கோட்டை கதவடைத்தப் பிறகு இவள் எப்படி
மலையடிவாரத்திற்கு
சென்றிருக்க முடியும் ?என்று ஐயுறுகிறார்கள்.
ஒரு பெண் .. ஒரு
பால்காரி மலை இறங்கி சென்றாள் என்பதை நம்ப
மறுக்கிறார்கள்.
அவளை அரசன் முன் கொண்டு நிறுத்துகிறார்கள்.
சிவாஜி மகாராஜா
அவள் மலை இறங்கிய கதையைக் கேட்கிறார்.
அப்பகுதியைப் பார்வையிடுகிறார்.
எவராலும் ஏறவோ இறங்கவோ’
முடியாத மலைப்பகுதி
என்று எதுவுமில்லை என்பதை அப்பெண்
அவருக்கு உணர்த்திவிட்டாள்.
தாய்மையின் பெருமையாகவும்
இதை மராட்டியர்கள்
தங்கள் பாடல்களில் கூத்துகளில் கொண்டாடுகிறார்கள்.
இன்றும் ராய்காட்
கோட்டையில் அவள் இறங்கிய பகுதியில் கட்டப்பட்ட
மதில்சுவருக்கு
ஹிர்கானி மதில் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இது திரைப்படமாகவும்
வந்திருக்கிறது.
ஹிர்கானிகள் –
பெண்கள் - சாதாரணமானவர்கள் தான்.
ஆனால் தேவைப்படும்போது
அவர்களின் செயல்
அசாதாரணமானதாகிவிடும்!
Thursday, December 9, 2021
மனித உரிமையும் மதமும் (டிச10, மனித உரிமை நாள்)
ஓர் இசுலாமியனாக இருந்துப் பார்,
Sunday, December 5, 2021
அறிவாயுதம் - ஜெய்பீம்
டிசம்பர் 06 (1956) பாபாசாகிப் அம்பேத்கரின்