கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன். கொண்டேன்.
அவன் தானா . ..இவன் அவன் தானா
அவனாகத்தான் இருக்க முடியும்.
அந்தச் சிரிப்பு, அந்த நடை
அந்த எழுத்தின் வளைவுகள்
அந்த உண்மையின் எதிரொலி
இவன் அவனாகத்தான் இருக்க முடியும்.
குந்தி தன் கர்ணபுத்திரனை அடையாளம் கண்ட
அதே நாளில் நானும் அவனை அடையாளம் கண்டேன்.
சிறுவனாக என் நினைவு உரையாடல்களில்
வளர்ந்த அவன்..
தன் காதலியின் மடியில்
வாலிபத்தின் முறுக்கேறிய தோள்கள்
இளைப்பாற படகடியில் படுத்திருந்தான்
என் மழைத்துளிகள் சிதறி விழுந்த கடல் அலை
அவன் பாதங்களை முத்தமிட்டு முத்தமிட்டு
நினைவுகளை மீட்டிக் கொண்டது.
கிருஷ்ணபரமாத்மாக்களின் அனுமதிக்கு
காத்திருப்பதில்லை அலைகள்.
பாண்டுப்புதல்வர்களுக்காக
எந்த வரமும் கேட்கப் போவதில்லை
என் அலைகள்..
அவனைக் கண்டு கொண்டேன்.
நீ அவன் தானா.. என்று நானும் கேட்கவில்லை.
நான் அவன் தான் என்று அவனும் சொல்லவில்லை.
இத்தனை ஆண்டுகளின் மவுனத்தில்
என் மொழியை அவன் கண்டடைந்தது போல
அவன் விழிகளை நான் கண்டடைந்தேன்.
இரசித்தேன் கவி அலைகளை...
ReplyDeleteஅருமை. படித்தேன், ரசித்தேன்!
ReplyDeleteஇராஜராஜர் பராக்...!
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
#சிகரம்
உணர்வு பூர்வமான கவிதை.
ReplyDelete