காமக்கிழத்தியும்
தேவி வழிபாடும்.
சடங்குகளில் வரலாற்றின் சுவடுகள் மறைந்திருக்கின்றன.
தேவி வழிபாடு செய்வதற்கு வடிவமைக்கப்படும் தேவியின் சிலைகள் காமாட்சிபுரத்திலிருந்து/ காமக்கிழத்தியின் பிடிமண் பெற்று செய்யப்படுகிறது.
Mud from a prostitute's doorstep, a ritualistic and symbolic addition.
ஏன்?
இதை அறிய வந்தப்போது பலருக்கு " வால்காவிலிருந்து கங்கை வரை" நினைவுக்கு வரும். அது மட்டுமல்ல சங்க காலத்தில் வாழ்ந்த காமக்கிழத்தியும் நினைவுக்கு வரும்.
தலைவன் - தலைவி என்ற சங்க கால ஆண்-பெண் வாழ்க்கையில் பேசப்படும் காமக்கிழத்தி ஒரு தார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்திற்கு முந்திய பலருடன் பாலுறவு கொண்ட சமூகத்தின் எச்சம் என்பதை சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல் வரிகளைக் கொண்டும் அன்றைய பொருளாதர கோட்பாட்டைக் கொண்டும் அறியலாம்.
திருமணம் என்ற ஏற்பாடு உருவானதற்கு காரணமாக பொய்யும் வழுவும் கூறப்படுகிறது. அக்காலத்தில் உருவான திருமண ஏற்பாட்டை ஏற்காத பெண்களும் இருந்திருக்கிறார்கள். இப் பெண்கள் " அன்னையே இனக்குழு சமூகத்தின் தலைவி" என்பதன் எச்சம்.
நம் வழிபாட்டு முறையில் தென் குமரியின் மகன் குமரன் என்று அழைக்கப்படுகிறார். குமரன், குமரியின் கணவன் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.
திருமண ஏற்பாட்டை விலக்கிய பெண்கள் தலைமைத்துவம் மிக்கவர்கள். போர்க்கலையில் சிறந்தவர்கள். இசை நடனம் ஓவியம் என்று பல கலைகளிலும் வல்லவர்கள்.
இந்தப் பெண்களை இவர்களின் தலைமைத்துவத்தை
இவர்கள் இனக்குழு வாழ்க்கையில் தலைமுறை தலைமுறையாக மனித குவத்திற்காக செய்த வீரமிகு வரலாற்றை...
அவர்களிடம் " பிடிமண்" வாங்கி சிலை செய்யும் தேவி வழிபாட்டில் மனித வரலாறு பொதிந்து வைத்திருக்கிறது.
நவராத்திரி முதல் இரவு
வெள்ளை உடையில் இருக்கிறேன்.
யாரும் என்னைத் தொட்டு விடாதீர்கள்.
எந்தக் கறையும் இன்றி
இந்த இரவை
காமட்டிபுரம்
கடந்து விட வேண்டும்.
மொட்டு விரியும் தருணம் இது.
உயிரின் ரகசியம் பொதிந்த இரவு.
பால் வீதியை வெளியில் நிறுத்தி இருக்கிறேன்.
நட்சத்திரங்களின் கண்களை
கரிய மேகத் துண்டுகளால் கட்டி விடுங்கள்.
இந்த ஓரிரவிலேனும்
வெள்ளை தாமரையில்
என்னுடல் பூத்திருக்கட்டும்.
ஹே
சென்னிமல்லிகார் ஜுனா..
ஒவ்வொரு இதழாக
இரவின் விரல்கள் தீண்டி
உதிர்வதற்குள்
விடிந்த விடாத
காமனை எரித்த
முதல் இரவு.
( இக்கவிதையிலும் இந்த வரலாற்றின் ரகசியத்தை எழுதி இருந்தேன். பலருக்கும் புரியவில்லை! 🙂🙏)
மிகச் சிறப்பு.... பூடகமான கவிதை... இருண்மை போல தோன்றினாலும் இது உள்ளுறை உவமம், இறைச்சியின் வகைப்பட்டதாகும்...
ReplyDeleteஆய்வுகள் தொடர்க
தமிழ் இயலன்
ReplyDelete