வேள்பாரி ரஜனி கலாட்டா.😃
வேள்பாரி ஒரு கதையாடல் மட்டுமல்ல.
அதன் இலக்கிய அடையாளம் என்பது கதைகள் தாண்டிய வடிவம்/உருவம்தான்.
இதை ஒரு படைப்பின் கதை கூறு & இழைபொருள்
Fabula & Narration என்பர்.
கதையை யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம்.
அதற்கு எந்த ஒரு திறமையும் இலக்கிய பிரக்ஞையும் தேவையில்லை!
ஆனால் இலக்கிய வடிவத்தில் இழை பொருள் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த இழை பொருள் இலக்கிய வாசிப்பில் ஒரு மாய சக்தி. ஓவ்வொரு பிரதியும் வாசகவெளியில் பல நூறு பிரதிகளாக மாறும் வித்தையை செய்வதும் அதுதான்.
அதுதான் கதை சொல்லியிலிருந்து ஒரு இலக்கியப் படைப்பை வேறுபடுத்திக் காட்டும் இடம். சினிமா என்ற காட்சி ஊடகம் தோல்வி அடையும் இடம் இந்தப் புள்ளி தான்.
தி.ஜானகிராமனின் மோகமுள் வாசகப் பிரதியை ஊடகப் பிரதியாக்குவதில் தோல்வி அடைந்தது இதனால்தான்.
வேள்பாரி?????
நிச்சயமாக வேள்பாரிக்கும் இந்தச் சிக்கல் ஏற்படும்.
பொதுஜன காட்சி ஊடகம், மக்களை குஷிப் படுத்தும் வியாபார சந்தையை நோக்கமாக கொண்ட திரையுலகம் இதைக் கையாளுவதில் சில மசாலா ஃபார்முலாக்களை வைத்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் போல பிரபலங்களைக் கொண்டு பிரமாண்டமான காட்சிகளைக் கொடுப்பது.
பார்வையாளனுக்கு தீனிப்போடும் உடை பின்னணி அலங்கார பிரமாண்ட காட்சி அமைப்புகளைக் கொண்டுவருவது.
இரண்டரை மணிநேரம் இந்த பிரமாண்டம் போதுமென பார்ப்பவரை வாய்பிளிந்து உட்கார வைப்பது..
அந்தப் படம் ஓடிடி க்கு வரும்வரை அதில் நடித்த பிரபலங்களைக் கொண்டு
24x7 அதைப் பற்றியே எட்டு கோடி தமிழர்களையும் பார்க்க வைக்கும் ஒரு வகையான அராஜகம்...செய்வது!
இதைப் பற்றி எழுதாவிட்டால் சமூக இலக்கிய கலை உலக குற்றமாகிவிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு சமூக வலைத்தளங்கள் எங்கும் நீக்கமற நடக்கும் ஆக்கிரமிப்பு...
இதில் இலக்கியம் தொலைந்துப்போகும்!
ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடக்கலாம்.
எதிர்காலத்தில் வேள்பாரியின் கதைச் சுருக்கம் புத்தக வடிவம் பெறும். அது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெறும்.
வேள்பாரி கதை மாந்தர்கள் அதாவது சினிமாவில் காட்டப்படும் கதை மாந்தர்களைத் தேடி விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரே சிலர் வேள்பாரியை முழுமையாக வாசிக்கலாம்.
தொடர்ந்து கடந்த கால பெருமிதங்களை மட்டுமே திரையுலகம் இலக்கியத்தில் இருந்து எடுத்துக் கொள்வதால் ஒரு ம_ _ அளவு கூட நம் பண்பாட்டு அரசியலில் அசைவைக் கொண்டு வர முடியாது.
வேள்பாரி தோழர் வெங்கடேசன் அறியாததா என்ன?
வாழ்த்துகள் தோழர்.
ஒரு பிரமாண்டமான வேள்பாரியை ஓடிடியில் பார்க்கும் நாளுக்காக நானும்.
#வேள்பாரி
#நாவல்சினிமா
#LiteratureCinema
#புதியமாதவி_13072025
ஐந்துக்கும், பத்துக்கும் அறம் பேசும் சங்கர் போன்றவர்களால் பிரமாண்டத்தை கொண்டுவரலாம். பாரியின் வாழ்வை ? கேள்விக்குறி தான். வேள்பாரி நாவலில் ஊடு பாவாய் இருக்கும் அரசியலை சினிமா பேசாது கடந்து போகும்.
ReplyDelete