Sunday, June 2, 2024

கலைஞரின் இந்திய அரசியல்.

 











இந்தியாவின் அடையாளம்

தெற்கிலிருந்து ஆரம்பிக்கிறது!💥

ஞானம் தேடி நடிப்பதற்கு கூட

தெற்கேதான் வந்தாக வேண்டும்!

மாயக்கிழவன்

எம் முப்பாட்டன்

வள்ளுவன் சிரிப்பது

கேட்கிறதா!

💥💥💥

கலைஞருக்கு நன்றி.

ந.மோ.வுக்கும் நன்றி 😊

🙏🙏🙏


இந்திய அரசியலில் கலைஞர் தெற்கின் அரசியலை

வாழ்வியலை மாற்றுக்கலாச்சாரத்தை இந்தியாவின்

அரசியலாகவும் வாழ்வியலாகவும் கலாச்சார

அடையாளமாகவும் கட்டமைக்ககும் முயற்சியைத் 

தொடர்ந்து செய்திருக்கிறார் .

அதன் வெளிப்பாடு தான் குமரிமுனையில் எழுந்து

நிற்கும் அய்யன் திருவள்ளுவரின்  சிலை.

விவேகானந்தர் பாறை

விவேகானந்தர் மண்டபம்

குமரிக்கடல்...

மிகவும் அருமையான இயற்கை சூழல்..

ஆனால் என்ன நடக்கிறது காலப்போக்கில் என்பதை

கலைஞர் கவனிக்கிறார்.

இந்து இந்தி இந்தியா என்ற ஒற்றைக் கலாச்சாரத் தூதர்களில்

ஒருவராக விவேகானந்தரை மாற்றுகிற அரசியல்..

அந்த விவேகானந்தர் பாறை எதை நோக்கி

நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற அரசியலைக் கவனித்ததன்

வெளிப்பாடு தான் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை.


அலைகள் மோதும் கடற்பாறையில் பறக்கும் காவிக்கொடி,

வெண் சங்கின் ஒலி, எங்கும் ஆர்ப்பரிக்கும் இந்தி..

வடக்கத்திய கலாச்சாரமே இந்திய கலாச்சாரமாக நம்மை

அழுத்தும்போது மெல்ல மெல்ல திருவள்ளுவர் சிலை

ஈர்ப்பு விசையாக மாறத்துவங்குகிறது.

இந்தியாவின் இருவேறு அரசியல் பாதையை 

இருவேறு கலாச்சாரத்தை இந்த உலகம் அறியட்டும்

என்ற கலைஞரின் பார்வை.. 

மிக முக்கியமான ஒரு அரசியல் பார்வை.

கலைஞர் இந்திய அரசியலில் முன்வைக்கும்

பார்வையாக விரிகிறது.

அதிலும் குறிப்பாக திருவள்ளுவர் வடக்கே இருக்கும்

இம்யத்தைப் பார்த்து நிமிர்ந்து நிற்கிறார்..

இந்தியாவை இமயத்திலிருந்து பார்க்காதீர்கள்

குமரிமுனையிலிருந்து பாருங்கள் என்று

சொல்லாமல் சொல்லும் அழகு..

பாராட்டுதலுக்குரியது.


#புதியமாதவி_2024ஜுன்03


#கலைஞர்_இந்தியஅரசியல்

#DMK_indiacultural_politics

3 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. அருமை

    ReplyDelete
  3. சரியான நேரத்தில் கூறிய சரியான கருத்து

    ReplyDelete