திருச்சியில் அண்ணா அவர்களைக் கொண்டு இரு கூட்டங்கள் நடத்துவது என்று திரு டி கே சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
முதல் நாள் கூட்டத்தில் அண்ணா அற்புதமாக பேசினார் .அண்ணாவின் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
திருச்சி நிகழ்வில் கலந்து கொள்ள வரும்போதுதான் அண்ணா ஒன்றை கவனிக்கிறார். டி கே சீனிவாசனை அழைத்து மறுநாள் கூட்டத்தை ரத்து செய்துவிடு என்றார் அண்ணா.
ஏன் அண்ணா?
"நாளை நாவலர் பேசுகிறார். "
"அண்ணா நாம் கூட்டம் போட்டால் அவருக்கு கூட்டம் சேராது"என்றார் சீனிவாசன் .
"அதனால்தான் கூட்டத்தை ரத்து செய்ய சொல்கிறேன்.நாவலர் சோமசுந்தர பாரதியாரின் சொற்பொழிவிற்கு இழிவு ஏற்படக் கூடாது .கட்சி கொள்கையைப் பரப்புவதை விட தமிழ் அறிஞர்களை மதிப்பது முக்கியமானது "
இவர்தான் எம் அண்ணா.
அண்ணாவின் நினைவுகள் ஒவ்வொன்றும் பெருமிதம் அடையும் தருணங்களாக
... என்றும் ...
அண்ணாவின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்💥🙏🙏🙏
#Anna
#Puthiyamaadhavi_20240915
#அறிஞர்அண்ணா
அண்ணா பிறந்த நாளில் சிரம் தாழ்ந்த வணக்கம்!
ReplyDeleteThat is why he is ARINJAR ANNA. We miss such tall leaders today
ReplyDeleteஅறியாத அருமையான தகவல்.. பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteஅறிஞர் அண்ணாவை போல் இப்போது யாரைவும் ஓப்பிட முடியாது.
ReplyDelete