இலண்டன் - திரள் சமூக கலை இலக்கிய குழுமத்தின்
பார்வைக்கு:
வணக்கம் நண்பர்களே.
உங்கள் விசித்திரமான
அணுகுமுறை தான் என்னை இதை எழுத வைத்திருக்கிறது, இதற்காக , நான் மிகவும் வருந்துகிறேன்.
காரணம்
அழைப்பிதழில் பெயர்
போட்டு அந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற முதல் நிகழ்வாக உங்களின் நேற்றைய
நிகழ்வு அமைந்துவிட்டது.
27/3/21 திட்டமிடப் பட்ட உங்கள் நிகழ்வு “பிரதிகளின்
மொழி அரசியல்”
மிகவும் அருமையான
மிகச்சிறந்த தலைப்பு. திட்டமிடப்பட்டபடி அன்று நிகழ்வு நடக்கவில்லை என்று அறிகிறேன்.
அது உங்கள் அமைப்பு சார்ந்த பிரச்சனை. அதில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதே நிகழ்வு
அதே தலைப்பில் 3/4/21 நேற்று நடைபெற்றிருக்கிறது.
வாழ்த்துகள்.
ஏப்ரல் 01 காலையில் சுவிஸ் ஊடறு றஞ்சி அவர்கள் என்னைத்
தொடர்பு
கொண்டு 03 ஆம்
தேதி பேச முடியுமா என்று கேட்டவுடன் நானும் இசைவு கொடுத்தேன். அதன் பின் நிகழ்வு இருக்கிறதா
இல்லையா என்பதை
இருமுறை நானே றஞ்சியுடன்
தொடர்பு கொண்கு கேட்டுக்கொண்டிருந்தேன். அழைப்புதழ் தயாராகிறதாக சொல்கிறார்கள் என்று
அவரும் அவருக்கு
கிடைத்தச் செய்தியை
என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் நிகழ்வு
நடக்கும் 03/4/21 நேற்று காலை 10.39 மணிக்கு றஞ்சி
எனக்கு அழைப்பிதழ்
அனுப்புகிறார். மாலையில் நடக்கும் நிகழ்வுக்கு
காலையில் தான்
அழைப்பிதழ் அனுப்பி உறுதி செய்யப்பட்ட து.
இதில் றஞ்சி மீது
எனக்குத் துளியும் வருத்தமில்லை.
றஞ்சி என்னைத் தொடர்பு கொண்ட து கெளரி பாராவின்
வேண்டுதலால். இதுவும் ஓகே. ஆனால் கெளரி பாராவுக்கு வாசன்
அவர்களுக்கோ ஏன்
திரள் குழுமத்திற்கு நான் புதியவள் அல்ல. ஏற்கனவே
அவர்கள் அழைத்து
31 அக்டோபர் 2020 ல் நடந்த நிகழ்வில் நான் கலந்து
கொண்டிருக்கிறேன்.
அப்போது வாசன் தான் என்னை நேரடியாக
தொடர்பு கொண்டு
கால அவகாசம் கொடுத்து நட த்தினார்.
அப்படி இருந்தும்
திரள் அமைப்பிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு
கொண்டு நிகழ்வை
உறுதிப்படுத்தவில்லை. காலையில் வாசன்
அனுப்பி இருந்த
உள்பெட்டி மெசஞ்சர் செய்தி மாலையில் நான்
பார்த்துவிட்டு
கடந்து செல்வதை தவிர வேறு வழி?
நீங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து அழைக்கவில்லை
என்று நான்
ஆதங்கப்படவில்லை.
ஆனால் 24X7 நாங்கள் ஓய்வாக இருப்பதாகவோ
அல்லது நீங்கள்
எப்படி எந்த முறையில் அழைத்தாலும் ஓடோடி
வந்துவிடுவோம்
என்றோ உங்கள் “மவுனமொழியின் பிரதி அரசியல்”
உணர்த்தியது. சகமனிதரை
எப்படி நட த்துகிறோம் என்பது தான்
பிரதி நிதியின்
சமூக அரசியல். எந்தக் கடவுச்சீட்டும் அதை தீர்மானிப்பதில்லை.
பிரதிகளின் மொழி அரசியல் < பிரதி நிதிகளின்
மவுன மொழி
அரசியலாக மாற்றியதில்
நீங்கள் சொல்ல விரும்பியது என்ன?
ஏன்?
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு என் வாழ்த்துகளும்
அன்பும்.
நிகழ்வில் கலந்து
கொள்ளவில்லை என்ற வருத்தமில்லை எனக்கு. ஆனால்
அதை இப்படி வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்காக வருந்துகிறேன்.
No comments:
Post a Comment