சசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா
எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..!)
ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்புகள் அரசியலில் இல்லை.
எதிரணிக்கு ஈடு கொடுக்கும் சர்வ வல்லமைப் படைத்தவர்
என்பதை மட்டும் சொல்லமுடியும். (அப்படிப் போடு )
இன்றைய அரசியல் களத்தில் மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர்
காமராஜ் போன்றவர்கள் தலைவர்களாக வந்தால்
அரைநாள் கூட தாக்குப்பிடித்து நிற்க முடியுமா என்ன?
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆயுதங்களை மட்டுமல்ல
தலைமையைக் கூட எதிரணியின் தகுதிகள் தான் தீர்மானிக்கின்றன.
அப்படிப் பார்த்தால் சபாஷ்..
அதிமுக வினர் இம்முறை ஜெயித்துவிட்டார்கள்.
இதில் தேவையில்லாமல் அடிவாங்கி இரத்தம் சொட்ட சொட்ட
போஸ் கொடுத்து சிலர் ஹீரோவாகிவிடலாம் என்று படம் பிடித்தது
ஏதோ காமெடி மாதிரி தான் இருந்தது.
எம் ஜி ஆர் மறைவுக்குப் பின் இதே அதிமுக வில் அதிகார மாற்றம்
எப்படி நடந்தது என்பதைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்
இன்று நடந்திருக்கும் அதிகார மாற்றமும் அமைதியாக அதைச்
செய்து காட்டி இருக்கும் விதமும் கவனிப்புக்குரியது.
வட்ட மாவட்ட பொறுப்புகளுக்கே அடி தடியில் இறங்கும் திராவிட அரசியலின் இதுவும் ஒரு திருப்புமுனைதான்..
புத்திசாலிகள் தான் காரண காரியங்களை வைத்துக்கொண்டு விவாதங்கள்
நடத்தி நடத்தி நடத்தி அதையே இன்னொரு விவாதமாக்கி..
விவாதங்களுக்குள் விவாதமாகி... எதை விவாதிக்க வந்தோம் என்பதையும்
மறந்து ... இப்படியாக தொடரும் விவாதக்களத்தைப் பற்றி எவ்வித கவலையும்
இன்றி... இப்படித்தான்யா நாங்க.. இது எங்க வீட்டு காரியம்.. எங்களுக்குத் தெரியும்னு
சின்னம்மா... நீங்க தான் எங்களை வழிநடத்த வேண்டும் என்று அழைத்து வந்து அமர வைத்துவிட்டார்கள்.
காங்கிரசு கட்சியில் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு சோனியா காந்தியை அழைத்து அகில இந்திய காங்கிரசுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எவ்விதமான உறுத்தலுமின்றி ஏற்றுக்கொண்டவர்கள் நாம்.
தமிழகத்தில் திமுக அரசியலில் நாலே நாலு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
இருந்தால் கூட தன் மகள் மகன் பேரன் உறவுக்களுக்கு சீட் போட்டு வைக்கும்
அரசியலையும் அமைதியாக ஏற்றுக்கொண்டவர்கள் நாம்.
அதை எல்லாம் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட அரசியல்
இதையும் ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எதை விதைத்தோமோ அதைத்தானே
அறுவடை செய்ய முடியும்?
so we can expect the same deterioration that Congress is undergoing
ReplyDeleteசரி..என்ன சொல்ல வருகின்றீர்கள்...
ReplyDeleteஎல்லாம் சரியாக நடப்பதாகவா?
இது என்ன காமராஜர் காலமா?
நீங்கள் இந்த எல்லாவற்றையும் ஆதரிக்கின்றீர்களா? கம்பும் உடையாமல்,பாம்பும் சாகாமல் எதற்கு இப்படி ஒரு மழுப்பல்...?
Please read the highlighted lines one more time. Thank you friend
Deleteஅருமையான பதிவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகாலந்தான் பதில் சொல்லவேண்டும்....இளையதலைமுறை ஆழ்வது சிறந்தது..
நீங்க நல்லவரா ? கெட்டவரா ?
ReplyDeleteOMG....thank you friend
Deleteதலைவிதி...?
ReplyDelete//இதில் தேவையில்லாமல் அடிவாங்கி இரத்தம் சொட்ட சொட்ட
ReplyDeleteபோஸ் கொடுத்து சிலர் ஹீரோவாகிவிடலாம் என்று படம் பிடித்தது
ஏதோ காமெடி மாதிரி தான் இருந்தது.//
அதிமுக குண்டர்களால் தாக்கபட்ட ஒருவரை பற்றி நீங்க சொன்ன வர்ணணை காட்டுமிராட்டிதனமானது.