தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து நானும் என் மும்பை முனியம்மாவும்
பேசிக்கொண்டிருந்தோம். இதுவரை எந்த ஓர் ஊடகமும் சொல்லாத
ஒரு கருத்தை என் முனியம்மா சொன்னாள் பாருங்கள்,
மோதி வெற்றி பெறுவாரா?
மோதி அலை வீசுகிறதா?
மோதி பிரதமரானால்..
விலைவாசி குறைந்துவிடும்,
வேலை வாய்ப்புகள் பெருகிவிடும்
தடையின்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்
நமக்கெல்லாம் பவர்கட் கிடையாது.
ரூபாயின் மதிப்பு கூடும்.
மொத்தத்தில் இந்தியா ஒளிரும்...
இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்டேன்.
அவள் சொன்னாள்...
இதெல்லாம் நடக்குமா எனக்குத் தெரியாதும்மா...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
மோதி ஜெயிச்சா தான் ராகுல்காந்திக்கும் காங்கிரசுக்கும்
எதிர்காலம் இருக்கு! .
இல்லாட்டி, பாவம் அந்தப் புள்ள.. எப்படி அரசியல் பண்ணும் சொல்லுங்க,
இந்த மோதியும் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யானு
தெரிஞ்சுடும்ல,
அவரு பிரதமரானா அவரு சாயம் வெளுத்துப்போகும்
இல்லாட்டி இப்படித்தான் மோதி மோதி னு டிவியிலே ஒரே கூப்பாடா
இருக்கும்.
"நீ யாரு வரனும்ங்க, மோதியா காங்கிரசா ?"
"நீங்க சொல்லுங்க, உங்களுக்கு யாரு வரணும்?"
" எனக்கு ரெண்டு பேரும் வரக்கூடாது.."
"இதே பொழைப்பா போச்சும்மா உங்களுக்கு,
நடக்கிற காரியத்தைப் பத்தி எப்பவும் பேச மாட்டீங்க!'
முனியம்மா அலுத்துக் கொண்டாள்.
அவளைப் பொறுத்தவரை நான் பேசுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதவை
என்ற எண்ணம்.
வர வர எனக்கும் அப்படி தோன்ற ஆரம்பித்துவிட்டது!
என்ன செய்வது, சொல்லுங்கள்!
“நான் பேசுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதவை
ReplyDeleteஎன்ற எண்ணம்.
வர வர எனக்கும் அப்படி தோன்ற ஆரம்பித்துவிட்டது!- மாற்றுச் சிந்தனாவாதி பொதுஜனவிரோதி எ்ன்று ஒரு பொன்மொழி உண்டே உங்களு்ககுத் தெரியாதா? உங்கள் பதிவின் கருவில் நானும் ஒரு பதிவு இட்டிரு்ககிறேன். நம் பணி தொடரட்டும் தொடரும்.