Sunday, August 14, 2011
ஆகஸ்டு 15.. மூவண்ணக் கொடியா... ? கறுப்புக்கொடியா..?
நாளை விடிந்தால் இந்தியா சுதந்திர தினக்கொண்டாட்டம்.
குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் துப்பாக்கி ஏந்திய
கருப்பு பூனைகளின் காவலுடன் பத்திரமாக நம் பாரதப் பிரதமர்
சுதந்திரநாள் உரையாற்றுவார். வெளிநாட்டு உள்நாட்டு பிரபலங்கள்
கைத்தட்டுவார்கள்.
எல்லா தொலைக்காட்சிகளிலும் திரைப்பட நட்சத்திரங்கள் வந்துப் போய்க்
கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்திய சுதந்திர வீரர்கள் குறித்தோ
விடுதலைப் போராட்டம் குறித்தோ எதாவது பேசித்தான் ஆகவேண்டும்
என்பதெல்லாம் இல்லை. சில நல்ல படங்களும் சில ஓடாதப் படங்களும்
டிவி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும். செய்தி வாசிப்பவர்கள் கொஞ்சம்
தூக்கலாக மேக்-அப் போட்டிருப்பார்கள்.
இந்தியாவில் ஒரிசா என்றொடு மாநிலம் இருக்கிறது. அந்த மாநிலத்தில்
ராயக்கடா மாவட்டத்தில் குச்சைய்படர் கிராமத்தில் ஆகஸ்டு 15ல் கறுப்புக்கொடி
ஏற்றுகிறார்கள். டிசம்பர் 2000ல் ஹிண்டல்கோ கம்பேனியை (Hindalco - Birla grp)
எதிர்த்து (Prakrat Sampad Suraksha Parisad - PSSP) இயற்கை வளங்களைப்
பாதுகாக்கும் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஒரிசாவில்
அதிகமாக இருக்கும் பாக்சைடு தான் ஹிண்டல்கோ , மிட்டல், டாடா, ஜிண்டால்,
எஸ்ஸார், பாஸ்கோ, ரியோ டிண்டோ, வேதாந்தா என்று பல முதலாளித்துவ
முதலைகளின் பசிக்கு ஒரிசாவைத் தீனியாக்க துடித்தது. இந்திய அரசும் வழக்கம்போல
பெருமுதலைகளின் பசி ஆற்றவே முன்வந்தது. 15 டிசம்பர் 2000ல் வெளியூரிலிருந்து
லாரிகளில் ஆட்களைக் கொண்டு வந்து பாக்ஸைடு சுரங்கங்களுக்கு ஆதரவாக
குரல் எழுப்பியது பணமுதலைகள். அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை விரட்டி
அடித்தனர். ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல்படை வந்திறங்கியது,.
3 ஆதிவாசிகள் காவல்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள்.
அவர்களின் நினைவாக இன்றும் குச்சைய்படர் (Kuchaipadar) கிராமத்தில்
ஆகஸ்டு 15, ஜனவரி 26 ல் கறுப்புக்கொடி ஏற்றப்படுகிறது.
தமிழனுக்கு இந்த ஆகஸ்டு 15ல் கறுப்புக்கொடி ஏற்ற எண்ணிலடங்கா
காரணங்கள் , ரத்தம் காயாத மண்ணில் ...
ஈரமாக இருக்கத்தான் செய்கின்றன.
No comments:
Post a Comment