Saturday, August 7, 2010
நன்றி சொல்லும் தருணம்
மும்பையின் ஜனநெரிசலில் கரைந்துப் போகாமல்
பிரமாண்டங்களின் வெளிச்சத்தில் சோர்ந்துப் போகாமல்
எப்போதும் என்னுடன் கை கோத்து பயணம் செய்கிறது
என் எழுத்தும் எழுத்து எனக்குத் தந்த நட்பு வட்டமும்.
எப்போதும் உணர்கிறேன்
நன்றி என்ற சொல்லின் போதாமையை ...
மழைப்பொழியும் மாலையில்
சூடானத் தேநீருடன் உங்கள் முகம் பார்த்துப் பேசாமல்..
எப்படி இருக்கிறாய்.. நலமா.. என்பதை மவுனமாய்
உள்ளங்கை அழுந்த ஒரு கைகுலுக்கலில் கேட்காமல்..-
அடடே ஹைக்கூ என்று சொல்லியிருக்கக் கூடாதா?
நான் விடுகதையாக்கும் என்றல்லவா நினைத்தேன்
என்று பொய்முகம் காட்டிச் சிரிக்காமல் -
ஸ்நேகம் வளர்க்கும் புன்னகை மலர்களைப்
பரிமாறிக்கொள்ளாமல்...
தமிழ்மணம் நிர்வாகிகள்,
வாசித்தவர்கள்,
வாசித்துப் பின்னூட்டம் எழுதியவர்கள்/ எழுதப் போகிறவர்கள்
வாசிக்காதவர்கள்/ இனி வாசிக்க இருப்பவர்கள்..
அனைவருக்கும்
அரபிக்கடலோரமிருந்து .
"நன்றி"
என்ற ஒற்றை வார்த்தையில் விடைபெறும் தருணத்தில்
உருதுக்கவிஞர் தருன்நும் ரியாஷின் "பழைய புத்தகம்"
கவிதை வரிகளை மீண்டும் வாசிக்கிறேன்.
புதிய ஒளி,
புரியாதச் சுவை
அறிமுகமில்லாத அறிமுகம்
இன்னும் தெரியவில்லை
நீ யாரென்று!
ஆனாலும்
இனிய நினைவுகள் மட்டும்
பழையப் புத்தகத்தின்
வாசனையைப் போல
என் உள்ளத்தில்.
HEY
ReplyDeletehey
hey am the first..
echesueme..i go read after i come..
nice postings.
evlo nalla therima pochey..
அன்பின் புதியமாதவி,
ReplyDeleteஅருமையான படைப்புக்கள். அற்புதமான மொழிநடை. வாசிக்கத்தூண்டும் தலைப்புக்கள். உண்ண்மைய துணிச்ட்சலுடன் சொல்லும் வீரம். இவையனைத்தும் உங்கள் வெற்றிக்கும், புகழுக்கும் அடிப்படியான காரணங்கள்ள். உங்கள் படைப்புக்களை மிகவும் விரும்பில் படிக்கும் ஒரு வாசகன் நான் என்னும் வகையில் உங்களின் இந்த நட்சத்திர அந்தஸ்தைக் கண்ண்டு மிகவும் பெருமைப்படுகிறேன்.
உங்கள் புகழும், பெயரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்
சக்தி
நன்றிக்கு ஒரு நன்றி.வாழ்த்துக்கள்
ReplyDelete