இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ. 1402,680,000,000/
The Indian rupees 1.4 trillion plan to destroy india's agriculture
அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய தொகை..
அதாவது இந்திய அரசு தன் ஓராண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்காக ஒதுக்கும் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமான தொகையைக் கொடுத்து நம் விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.
என்ன மாதிரியான மாஸ்டர் கில்லர் பளான்.. .
. ஹாலிவுட் படங்களில் தான் இம்மாதிரியான கற்பனைகளைக்
காட்டுவார்கள் என்றால் நம்ம ராஜாங்கத்தின்
மந்திரிமார்களும் அவர்களின் திட்டங்களும் ..
எப்படி எல்லாம் வினையாற்றிக் கொண்டிருக்கின்றன
என்பதை அறிய வரும் போது அருவருப்பாக இருக்கிறது .
. இவ்வளவு கீழ்த்தரமாக... ச்சே..
இப்படியும் ஒரு மக்கள் நல அரசு செயல்படுமா ? என்ன!
இந்தப் புள்ளிவிவரங்களை ஏன் எந்த ஓர் எதிர்க்கட்சியும்
நாடாளுமன்றம், மேல்சபைகளில் பேசுவதே இல்லை!
ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நம் ஊடகத்துறையில்
கமலஹாசன் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதே நம்
தலையாய பிரச்சனையாக பேசப்படுகிறது.
இதெல்லாம் ஏன்? ஏன்? விவாதத்திற்கே வருவதில்லை!
அறியாமை என்று சொல்லாதீர்கள்.
ஏற்க மறுக்கிறது என் மனம்.
பொதுமக்களின் பார்வைக்கும் இக்காட்சிகளும்
உண்மை நிலவரங்களும் வந்துவிடக் கூடாது என்பதில் எல்லோருமே
கூட்டுக் களவாணிகளாக செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
இனி, சில விவரங்கள்.. (நீண்ட பதிவு என்றாலும் வாசிக்கவும் பகிரவும். )
1) கடந்த 2015-16 நிதிநிலை ஆண்டில் இந்தியா உணவு பொருட்கள் (தானியங்கள், பழங்கள், எண்ணெய்) இறக்குமதி தொகை தான் மேலே குறிப்பிட்ட ரூ 1.4 டிரில்லியன் . இந்த இறக்குமதி
தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாகாவோ உதவித்தொகையாகவோ வழங்கப்பட்டிருந்தால் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்திருக்கமாட்டான்.
2) வெள்ளைக்காரன் எதை எல்லாம் செய்து இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தானோ அதையே தான் இந்திய அரசு தன் வெளியுறவுக் கொள்கை, இறக்குமதி சட்டங்கள் மூலம் தன் சொந்த நாட்டின் மக்களிடமும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது
இந்திய அரசு இந்திய விவசாயத்தை அவுட்சோர்ஸ் கொடுக்க முன்வந்துவிட்டது.
இனி விவசாயிகள் இந்தியாவுக்குத் தேவையில்லை! என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் தான் அண்மைக்காலங்களில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளின் போராட்டங்களையும்
பிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.
3) கடந்த இரு ஆண்டுகளில் (2014-15 முதல் 2016-17 வரை) இந்தியா இறக்குமதி செய்திருக்கும் கோதுமை, மைதா, பாசுமதி அரிசி தவிர்த்த பிற அரிசிகள் மட்டும் 6600 % விழுக்காடு அதிகம்!
ஆனால் இந்த இறக்குமதிக்கான தேவை இருந்ததா என்றால் இல்லை,
இது ஒரு திட்டமிட்ட விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமை, வன்கொலை.. என்றுதான் சொல்ல வேண்டும்.
4) இந்திய விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்குவதை விட ஆஸ்திரேலியாவிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வது பெருமுதலாளிகளுக்கு கொள்ளை இலாபம் தருவதாக இருக்கிறது.
காரணம் இறக்குமதி வரிச் சலுகைகளும்
இந்திய அரசின் இறக்குமதி கொள்கைகளும்.
5) கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது
என்று அதிரடியாக அறிவித்த மோதி அரசு தன் அதிரடி நடவடிக்கையால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று காரணம் சொல்லி புறவாசல் வழியே இறக்குமதி வரியை ரத்து செய்தும் குறைத்தும்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உணவுதானியங்களை இந்திய சந்தையில் பரப்பியது.
6) இம்மாதிரியான அத்துமீறிய இறக்குமதி சலுகைகளால் இந்திய விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் . ஒவ்வொரு விளை பொருளுக்கும் அரசாங்கம் ஒரு குறைந்த பட்ச
கொள்முதல் விலையை நிர்ணயித்திருக்கிறது .
( MSP - MINIMUM SUPPORT PRICE)
இப்படி நிர்ணயித்திருக்கும் விலையை விட
இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருளின்
விலை குறைவாக இருந்தால் உணவுதானியங்களை
விளைவித்த விவசாயி என்ன செய்வான்?
7) இது கற்பனையோ அரசுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரமோ அல்ல.
இதுதான் உண்மை நிலவரம்.
எ.கா. மராட்டிய மண்ணில் பருத்தி, கரும்பு விவசாயிகள் மிக அதிகமாக தற்கொலை செய்து கொண்டார்கள். ஏன்? பருத்தியோ கரும்போ விளைச்சலில்லை என்பதா காரணம்?
இந்திய அரசின் ஒழுங்கற்ற இறக்குமதி சட்டங்கள் தான் காரணம்
என்கிறார் இந்திய சுகர் மில் அசோஷியன் டைரக்டர் ஜெனரல் அபினாஷ் வர்மா. கடந்த 6 ஆண்டுகள் இந்தியாவில் உற்பத்தி ஆகும் சர்க்கரையின் அளவு இந்திய தேவைக்கும் அதிகமாகவே இருந்தது என்பது தான் உண்மை.
ஆனால் இந்திய அரசு சர்க்கரையை இறக்குமதி செய்தது. ! அப்படி இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை உள்நாட்டில் உற்பத்தியாகும் சர்க்கரையை விட விலை குறைவாக இருந்தது.
அதை இறக்குமதி செய்யும் கார்ப்பரேட்டுகள் மால்களில் கடை விரித்தார்கள்.
இனிப்பு தரமில்லாத பார்க்க பள பளப்பாய் இருக்கும் அந்த சர்க்கரையை நாமும் வாங்க ஆரம்பித்தோம். விளைவு..? கரும்பு விளைவித்த விவசாயிகளின் கடன் தொகை 22000 கோடியாக
பயமுறுத்தியது. தற்கொலைகள் அரங்கேறின.
8) இதே நிலைதான் 2015--16ல் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் விதைகள் , சிறுதானியங்கள் விவசாயத்திலும் நடந்தது. 2015-16 ஆண்டில் எண்ணெய் விதைகளின் விளைச்சல் அபரிதமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு தந்திரமாக ( கேவலமாக) அறுவடைக்கு முன் சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை மிகவும் குறைத்தது.
சர்க்கரையின் அதே விளைவு தான்
எண்ணெயிலும் வந்துவிடிந்தது. பாமாயில், சோயா ஆயில், அரிசி ஆயில் என்று பல்வேறு எண்ணெய் பாக்கெட் பாக்கெட்டாக மிகக்குறைந்த விலையில் நம் சந்தைகளில் விலைக்கு வந்தன. நாமும் அதை எல்லாம் வாங்க ஆரம்பித்தோம். இலவசம், குறைந்த விலை இவைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலோ நம் கழுத்துக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் தற்கொலை கயிறோ நம் கண்களுக்குத் தெரிவதில்லை!
சிறுதானியங்களின் விளைச்சல் இருந்த போதும் 2016-17ல் 5.9 மில்லியன் டண் தானியங்களை 25,600 கோடிக்கு இந்திய அரசு இறக்குமதி செய்தது ஏன்?
9) இன்னும் 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி ஜோராக நடக்கப்போகிறது. மொசம்பியா, பிரேசில், மியான்மார் நாடுகளிலிருந்து உணவுதானியங்கள், பழங்கள், சமையல் எண்ணெய் இத்தியாதிகளை
டண் கணக்கில் இந்தியா இறக்குமதி செய்யப்போகிறது. விளைவுகள் இன்னும் மோசமாகும்.
10) நீர்மேலாண்மை அறியாத மாநில அரசுகள், மழை இன்மை, நதிநீர்ப்பங்கீடு இத்தியாதி இன்னும் சில பிரச்சனைகளால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
விளைந்தாலும் சரி, விளையாவிட்டாலும் சரி..
இனி இந்திய அரசுக்கு விவசாயம் தேவையில்லை
விவசாயிகளும் தேவையில்லை.
T Haque , former head of the commission for Agricultural Costs and Prices , says
India's agrarian policies over the years have lacked coherence. Despite domestic production, we inexplicably keep promoting import. To get our agriculture out of this vicious cycle,
first we need to set our foreign trade policies in order.
ref : July 1- 15 , 2017, edition of Down to earth